»   »  பிரமாண்ட இயக்குனர் தவமாய் தவமிருக்க பிரபுதேவாவுக்கு அடித்தது ஜாக்பாட்

பிரமாண்ட இயக்குனர் தவமாய் தவமிருக்க பிரபுதேவாவுக்கு அடித்தது ஜாக்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாஹோ படத்தை அடுத்து பிரபாஸை இயக்கப் போவது நம்ம பிரபுதேவா தானாம்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக 5 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் பிரபாஸ். அவர் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் லைன் கட்டி நிற்கிறார்கள். அவரை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்ல பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோஹார் தவமாய் தவம் இருந்து வருகிறார்.

பிரபுதேவா

பிரபுதேவா

இயக்குனர்கள் விரும்பும் நாயகன் பிரபாஸை அடுத்து இயக்கப் போவது பிரபுதேவா. பிரபாஸ் என் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் தமிழ்-தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்தே அவரை எனக்கு தெரியும் என்கிறார் பிரபுதேவா.

இயக்கம்

இயக்கம்

என் இந்தி படமான ஆக்ஷன் ஜாக்சனில் பிரபாஸ் கவுரவத் தோற்றத்தில் வந்தார். அவரை வைத்து படம் எடுக்க ஆவலாக உள்ளேன். பாகுபலி ஹிட்டானதால் நான் பிரபாஸை இயக்க ஆசைப்படவில்லை என்று பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

சாஹோ

சாஹோ

பிரபாஸை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று சில காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். தற்போது அவர் சாஹோ படத்தில் பிசியாக உள்ளார். அந்த படத்தை முடித்தவுடன் என் படத்தை துவங்குவேன் என்று பிரபுதேவா கூறியுள்ளார்.

English summary
Prabhudeva is set to direct Prabhas after he completes his current movie Saaho with director Sujeeth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil