»   »  அஜித் படத்தை பிரபுதேவா இயக்காததற்குக் காரணம் இதுதானா?

அஜித் படத்தை பிரபுதேவா இயக்காததற்குக் காரணம் இதுதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்தை விட்டுட்டு சல்மான் கானுடன் கூட்டணி!- வீடியோ

சென்னை : 'மெர்க்குரி', 'யங் மங் சங்' என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரபுதேவா மீண்டும் படம் இயக்க இருக்கிறார்.

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த படத்தை பிரபுதேவா இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், பாலிவுட்டின் முன்னணி ஹீரோ சல்மான் கான் நடிப்பில் 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறாராம் பிரபு தேவா.

பிரபுதேவா இயக்கம்

பிரபுதேவா இயக்கம்

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தி படம் 'சிங் இஸ் பிளிங்'. இந்தப் படம் 2015-ல் வெளியானது. அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய பிரபுதேவா, தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

மீண்டும் படம் இயக்கும் பிரபுதேவா

மீண்டும் படம் இயக்கும் பிரபுதேவா

தற்போது பிரபுதேவா மீண்டும் பாலிவுட் படத்தை இயக்கவுள்ளார். பாலிவுட்டில் ஹிட்டான 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபு தேவா இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார்.

அடுத்த வருடம் ஷூட்டிங்

அடுத்த வருடம் ஷூட்டிங்

அர்பாஸ் கான் தயாரிக்கும் 'தபாங் 3' படத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கவுள்ளனர். அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.

ரிலீஸுக்கு வெய்ட்டிங்

ரிலீஸுக்கு வெய்ட்டிங்

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவான 'மெர்க்குரி', 'யங் மங் சங்', 'லக்‌ஷ்மி' ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. மேலும் 'சார்லி சாப்ளின் 2', 'ஊமை விழிகள்' ஆகிய படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் பிரபு தேவா.

அஜித் படம்?

அஜித் படம்?

அஜித்தின் விசுவாசம் படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக முன்பு தகவல் வெளியானது. பிரபுதேவா பாலிவுட் படம் இயக்கவிருப்பதால், அஜித் 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் தான் நடிப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

English summary
Prabhu Deva acting in films like 'charlie chaplin 2' and 'Oomai vizhigal', is decided to directing the film again. Prabhudeva to direct 'Dhabang 3' lead by salman khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil