»   »  டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா: வருண் தவான்

டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா: வருண் தவான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ வருண் தவான் தெரிவித்துள்ளார்.

ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா, சல்மான் யூசுப் கான் உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

ஏபிசிடி2

ஏபிசிடி2

ஏபிசிடி 2 படத்தில் பிரபுதேவாவுடன் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி ரிலீஸாகிறது. பாலிவுட்டின் முதல் 3டி டான்ஸ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா

பிரபுதேவா

பிரபுதேவா எப்படி டான்ஸ் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஏபிசிடி 2 படத்தில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து அசத்தியுள்ளார் பிரபுதேவா. படத்தில் பிரபுதேவா வரும் காட்சிகளில் ரசிகர்களின் கண்கள் பிறர் பக்கம் செல்லாது என்று கூறலாம்.

சச்சின்

சச்சின்

பாம்பு போன்று வளைந்து வளைந்து ஆடும் பிரபுதேவாவை டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் என வருண் தவான் தெரிவித்துள்ளார். படத்தில் ரெமோ, பிரபுதேவா என இரண்டு பெரிய டான்ஸ் மாஸ்டர்களுடன் பணியாற்றியதை மறக்கவே முடியாது என்கிறார் வருண்.

லாஸ் வேகாஸ்

லாஸ் வேகாஸ்

ஏபிசிடி 2 படத்திற்காக நடிகர், நடிகைகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் புரபஷனல் டான்ஸர்களுடன் டான்ஸ் ஆடினர். அந்த அனுபவம் ஸ்பெஷலானது என்றும், படத்திற்காக 18 முதல் 20 வகையான டான்ஸ் கற்றுக் கொண்டதாகவும் வருண், ஷ்ரத்தா தெரிவித்துள்ளனர்.

ஷ்ரத்தா

ஷ்ரத்தா

வருண் ஒரு டான்ஸர். ஆனால் நான் தற்போது தான் முதல்முறையாக டான்ஸ் படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் பிறந்தநாள் பார்ட்டிகள் அல்லது கண்ணாடி முன்பு டான்ஸ் ஆடியுள்ளேன் என்று கூறியுள்ளார் ஷ்ரத்தா.

English summary
ABCD 2 star VArun Dhawan has called Prabhu Deva as Sachin Tendulkar of Dance. ABCD 2 is set to hit the screens on june 18th.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil