பிரபுதேவாவின் 2 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?: வீடியோ இதோ
Recommended Video

சென்னை: பிரபுதேவா தனது மகன்களின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மனைவியை பிரிந்தாலும் பிரபுதேவா தனது மகன்கள் மீது பாசமாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூத்த மகனின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது 2 மகன்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மகன்கள்
பிரபுதேவா வெளியிட்டுள்ள வீடியோவில் அவரின் மகன்கள் முண்டாசு கவி பாரதியார் என்று கூறுகிறார்கள். சுவரில் பாரதியாரின் முண்டாசும், மீசையும் வரையப்பட்டுள்ளது.
இளைய மகன்
மற்றொரு வீடியோவில் பிரபுதேவாவின் இளைய மகன் தனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த திருக்குறளை வாசிக்கிறார்.
விருப்பம்
பிரபுதேவா வெளியிட்டுள்ள வீடியோக்களை பார்த்தவர்கள் மகன்களை நடனமாட வைத்து அந்த வீடியோவை வெளியிடுமாறு அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரதியார்
பாரதியார் என்றாலே நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்திருப்பார். இந்த படத்தில் இல்லையே, அவர் என்ன மதம் மாறிவிட்டாரா என்று புதுப் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் ஒருவர்.


Click it and Unblock the Notifications











