இங்கே ரிலீஸ் ஆகலைன்னாலும் திரைப்பட விழாவில் ரிலீஸ் நிச்சயம் - 'மெர்க்குரி' டீம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் 'மெர்க்குரி'. வசனமே இல்லாமல் சைலண்ட் மூவியாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்களாகின்றன.
ரிலீஸுக்கு தயாராக இருக்கும் 'மெர்க்குரி' திரைப்படத்தை ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் திரைப்படத்துறையினர் ஸ்ட்ரைக் நடத்தி வருவதால் மெர்க்குரி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற குழப்பம் நிலவிவருகிறது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் 'மெர்க்குரி' திரைப்படம் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்படுகிறது. இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று.
ஸ்ட்ரைக் ஒருவேளை நீடித்து, ஏப்ரல்-13 அன்று மெர்க்குரி படத்தை இங்கே ரிலீஸ் செய்ய முடியாமல் போனாலும் திட்டமிட்டபடி லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா மெர்க்குரி படத்தை திரையிடுவதில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











