»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

குஸ்தி படத்துக்காக பிரபுவும், கார்த்திக்கும் மீண்டும் இணைகிறார்கள்.

மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு பிரபுவும், கார்த்திக்கும் எப்போதும் தயங்கியதில்லை. கமல், ரஜினி, சத்யராஜ் ஆகியோருடன் பிரபு நடித்திருக்கிறார். அதேபோல் மோகன், விஜயகாந்த், அஜீத்குமார், பிரபுதேவா ஆகியோருடன் கார்த்திக் நடித்திருக்கிறார்.

இந்த இருவரும் சேர்ந்து நடித்த படம் அக்னி நட்சத்திரம். இருவரும் போட்டி போட்டு அந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். இப்போது இந்த ஜோடி குஸ்தி படத்துக்காக மீண்டும் இணைகிறது.

சத்யராஜ் நடித்த அடிதடி படத்தின் மூலம் கொஞ்சம் காசு பார்த்த சுந்தரி பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஞானசுந்தரிதான் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

ஏறக்குறைய பிரபு, கார்த்திக் இருவருக்கும் மார்க்கெட் அவுட். இப்போது கமல் புண்ணியத்தில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் பிரபு நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் மனதில் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, நடிகர் சங்கத்தில் பொழுது போக்கிக் கொண்டிருந்தார் கார்த்திக். இப்போது பிரபுவுடன் சேர்ந்து இவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற காக்கை குருவி என்ற படத்தைத்தான் தமிழில் குஸ்தி என்று எடுக்கிறார்கள். இங்கு இயக்குவது ராஜ்கபூர். படத்தில் கதாநாயகிகள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்தப் படத்தின் வெற்றிதான் தங்களுக்கு அடுத்த பட வாய்ப்புகளைத் தரும் என்பதால் பிரபுவும், கார்த்திக்கும் கடுமையாக உழைக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் தெரியுமா? கார்த்திக்தான் இப்போது கோலிவுட்டில் குறைந்த சம்பளம் வாங்கும் ஹீரோவாம். கால்ஷீட் சொதப்பல்களால் பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து, சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாராம் கார்த்திக்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil