For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரபு தேவா இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சிம்பு.. கூட்டணியே செமயா இருக்கே !

  |

  சென்னை: நடன இயக்குனர், ஹீரோ, இயக்குனர் என பல முகங்களை கொண்டுள்ள நடிகர் பிரபுதேவா தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

  தமிழில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி நடித்து வரும் இவர் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராதே என்ற படத்தை இயக்கி இருந்தார் ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

  படப்பிடிப்பில் தவறி விழுந்த இயக்குநர் சேரன்.. தலையில் பலத்த காயம்.. 8 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல்! படப்பிடிப்பில் தவறி விழுந்த இயக்குநர் சேரன்.. தலையில் பலத்த காயம்.. 8 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல்!

  போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து பிரபுதேவா அடுத்து இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

  பாலிவுட்டில் ரீமேக்

  பாலிவுட்டில் ரீமேக்

  இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அனைவராலும் விரும்பப்படும் நடிகர் பிரபு தேவாவுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது குறிப்பாக தமிழில் மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்து புகழ் பெற்றவர். தெலுங்கில் மிகப்பெரிய வசூல் செய்த போக்கிரி திரைப்படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்து மாஸ் காட்டினார். அதில் விஜய் அசால்டாக நடிப்பின் மூலம் படத்தில் வேற லெவல் செய்திருப்பார். இவர்களது முதல் கூட்டணியே மிகப்பெரிய வெற்றி பெற்று திரை உலகையே அதிர வைத்தது.

  போக்கிரி

  போக்கிரி

  போக்கிரி வெற்றியைத் தொடர்ந்து பிரபு தேவா விஜய் மீண்டும் இணைந்து வில்லு என்ற கலகலப்பான ஆக்சன் திரைப்படத்தில் பணியாற்றினார் இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது ஆனால் போக்கிரி அளவுக்கு எதிர் பார்க்கப்பட்டதால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். நல்ல வசூலுடன் சுமாரான விமர்சனத்தைப் பெற்றது. பின் எங்கேயும் காதல் மற்றும் வெடி உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த பிரபுதேவாவுக்கு இயக்குனராக தமிழ் சினிமா கை கொடுக்காததால் ரூட்டை மாற்றி பாலிவுட்டுக்கு பறந்து அங்கே ஹிட்டுகளை கொடுத்தார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் சல்மான் கானுடன் இணைந்து வான்டட் படத்தை இயக்கி மிகப்பெரிய வசூலை அள்ளினார்.

  ராதே

  ராதே

  ரவுடி ரத்தோர், ஆர் ராஜ்குமார் திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து தபாங் 3 மற்றும் சமீபத்தில் வெளியான ராதே உள்ளிட்ட படங்களை பிரபுதேவா இயக்கினார். ஆனால் பாலிவுட் படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை குறிப்பாக கடைசியாக வெளியான ராதே ரசிகர்களால் எந்த அளவிற்கு உச்சத்திற்கு சென்று கலாய்க்க முடியுமோ அந்த அளவிற்கு கலாய்த்து தள்ளி விட்டனர். இத்தனைக்கும் ராதே படத்தின் கதை கொரியன் மொழியில் ஹிட் அடித்த பிரபல படத்தின் அபூர்வ ரீமேக்காக எடுக்கப்பட்டது . சல்மான்கான் திரை வாழ்க்கையிலேயே படுதோல்வியை சந்தித்த படமாக ராதே ஆனது.தற்போது பிரபு தேவா நடிப்பில் வெளிவர போகும் படமான பொய் கால் குதிரை படத்தின் போஸ்டரில் ஒற்றை காலுடன் மிரட்டலாக உள்ளார் .அப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார்,பிக் பாஸ் புகழ் ரைசா போன்ற பலரும் நடித்துள்ளனர்.இந்த படம் பிரபு தேவா நடிப்புக்கு தீனிபோடும் விதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

  ஏங்கும் சிம்பு

  ஏங்கும் சிம்பு

  தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சிம்பு மேல் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை படங்கள் அனைத்தும் சறுக்க தொடங்கிய பிறகு .கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் நல்ல வரவேற்பை பெற்றது ,அதன் பிறகு மீண்டும் ஃபார்முக்கு வர பல படங்கள் நடித்தும் எந்த படமும் சரியாக கை கொடுக்கவில்லை.அச்சம் என்பது மடமையடா படம் சற்று தூக்கிவிட, நிலைதடுமாறிய சிம்பு விற்கு ஈஸ்வரன் படம் நல்ல பெயரை பெற்று தந்தது .ஈஸ்வரன் பட வெற்றிக்காக சிம்பு மெனக்கெட்டது அவரது ரசிகர்களை மிகவும் கவலைப்பட செய்தது .ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி தன்னை நிரூபிக்க பல சவால்களை சந்தித்து அப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது .இப்போது இவர் நடிக்கும் மாநாடு படமும் நிறைவு பெற்று விட்டது .அப்படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .தற்ப்போது அப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது .அதன் பிறகு பத்து தல ,நதிகளிலே நீராடும் சூரியன் படமும் கைவசம் வைத்துள்ளார் ..அதனால் பிரபு தேவாவுடன் இணையும் படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகின்றது .கைவசம் உள்ள படங்கள் ஹிட் அடித்தால் கண்டிப்பாக சிம்பு மீண்டும் கனவு நாயகனாக வளம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை .

  சிம்பு ஹீரோவாக

  சிம்பு ஹீரோவாக

  தமிழில் பொன் மாணிக்கவேல், பஹீரா மற்றும் பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வந்த பிரபுதேவா இப்பொழுது மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருந்தார். மிஷ்கின் அதிக அளவு சம்பளம் கேட்டதால் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஏஜிஎஸ் நிறுவனம் பிரபுதேவாவை இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சிம்பு மற்றும் பிரபுதேவா இணைய உள்ளது உறுதியாக இருக்க இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. பிரபுதேவா ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து எங்கேயும் காதல் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.பிரபு தேவா ,சிம்பு வித்யாசமான கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது .எப்படியோ படம் ரசிகர்களுக்கு பிடித்தால் சரி .

  English summary
  Simbu and Prabudeva are all set to join hands. The dancer -Actor -Director Prabudeva will direct Simbu in the next movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X