Dude Day 5 collection: கொட்டும் மழையிலும் மாஸ் காட்டும் டியூட்.. 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் டியூட் திரைப்படத்தின் 5 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்றைய தலைமுறையினரின் வரவேற்பை பெற்ற பிரதீப் ரங்கநாதன் பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தாய் மாமன் பால்வளத்துறை அமைச்சர் சரத்குமாரின்
மகள் மமிதா பைஜும், பிரதீப் ரங்கநாதனும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் போல பழகி வருகின்றனர். இந்த நேரத்தில் மமிதா பைஜுக்கு பிரிதீப் ரங்கநாதன் மீது காதல் வர ப்ரொபோஸ் செய்கிறாள். ஆனால், பிரதீப் உன் மீது எனக்கு காதல் வரவில்லை என்று சொல்லிவிட மன வேதனை அடைந்த மமிதா பைஜு மேற்படிப்புக்காக பெங்களுருக்கு சென்று விடுகிறாள். இத்தனை நாட்களாக தன்னுடன் தோழியாக பழகி வந்த மமிதா பைஜு தன்னுடன் இல்லாததால், அவளை பற்றி நினைக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு மமிதா மீது காதல் வருகிறது. இந்த காலை தனது மாமா சரத்குமாரிடம் சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார்.

டியூட் படத்தின் கதை: இதையடுத்து, இருவருக்கும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாக சொல்கிறாள் மமிதா. அதன் பின் திருமணம் நடந்ததா? மமிதா யாரை காதலித்தார் என்பது தான் 'டியூட்' படத்தின் கதை. படம் கலகலப்பாக சென்றாலும், படத்தில் ஆணவக்கொலையை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன், ஜென் ஸீ தலைமுறையினரின் பல்ஸை சரியாக தெரிந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் ரசிக்கும் நல்ல படமாக கொடுத்து இருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு 12 கோடியும், மமீதாவுக்கு 60 லட்சம், சரத்குமார் 70 லட்சம், நேகா செட்டிக்கு 40 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5நாள் வசூல்: இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17ந் தேதி தியேட்டரில் வெளியானது முதல் நாள் படம் ரூ. 9.75 கோடியும், இரண்டாம் நாள் ரூ10.4 கோடியும், ஞாயிற்றுகிழமை ரூ. 10.6கோடியை படம் வசூலித்தது. தீபாவளியன்று படம் ரூ.10.8 கோடியை வசூலித்தது இதில் தமிழகத்தில் மட்டும் 9 கோடியும், தெலுங்கானாவில் 1.8 கோடியை வசூலித்துள்ளது. ஐந்தாம் நாளான நேற்றும் பொதுவிடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் ரூ.9 கோடியாக உள்ளது. மொத்தத்தில் டியூட் திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ.50.55 கோடியை வசூலித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











