DUDE: பிரதீப் ரங்கநாதனின் ‘ட்யூட்‘ படத்தில் இருந்து முதல் பாடல் ‘ஊறும் பிளட்‘ வெளியானது!

சென்னை: 'ட்யூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திரங்களாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து வருபவர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ. பிரதீப் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்ட பிறகு, நடிகராக லல் டுடே படத்தில் வெற்றி கண்டார். தொடர்ந்து அவர் நடிப்பில் அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

Pradeep Ranganathan DUDE
Photo Credit:

'ட்யூட்' : பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கவுள்ளார். இவர் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து தற்போது படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது. 'ட்யூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான, 'ஊறும் பிளட்' படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையில் பால் டப்பா இந்த பாடலை பாடி இருக்கிறார்.

எல்.ஐ.கே : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'எல்.ஐ.கே' படமும் தீபாவளி வெளியாக உள்ளது. எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, கவுரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'எல்.ஐ.கே'. லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்திவரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீன ஹைப்பை ஏற்றி உள்ளது. 2040ல் நம்முடைய தமிழ்நாடு எப்படி இருக்கும் என இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள் .பிரதீப் ரங்கநாதன் படம் என்றாலே அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும் அதே 'எல்.ஐ.கே' திரைப்படமும் நிச்சயம் வெற்றிபெறும் என நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X