கோமாளி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் முன்னணி ஹீரோ!

சென்னை : நடிகர் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் 2019 இல் வெளியான திரைப்படம் கோமாளி.

முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது.

இப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

காமெடி திரைப்படம்

காமெடி திரைப்படம்

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இளம் இயக்குனர்கள் தொடர்ந்து அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்க அதில் சிலர் மட்டுமே தனித்துவமான படங்களை இயக்கி ஹிட் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளனர். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு கலகலப்பான காமெடி திரைப்படம் வெளியான கோமாளியை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி

கோமாளி

ஆரம்பம் முதலே காமெடி குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் கோமாளி படத்தை முற்றிலும் வித்தியாசமாக கொடுத்திருந்தார். இதுவரை நடித்திராத சவாலான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார். 90களின் காலகட்டத்தில் கோமாவிற்கு சென்ற ஒருவர் இப்பொழுது கோமாவிலிருந்து வெளிவந்தால் எவ்வாறெல்லாம் நடந்து கொள்வார் என்பதை ரசிக்கும் வகையில் மிகவும் நகைச்சுவையோடும் சிந்திக்கவும் வகையிலும் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

விக்ரம் ஹீரோவாக

விக்ரம் ஹீரோவாக


கோமாளி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படத்தை பற்றி அறிய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க இப்பொழுது முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது முதல் படம் கோமாளியை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து பிரதீப் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரம் இப்பொழுது பொன்னியின் செல்வன், கோப்ரா, சியான் 60 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது கோப்ரா வெளியாக தயாராக இருந்தாலும் அதற்கு முன்பாகவே சியான் 60 வெளியாகிவிடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X