Dude Day 4 Box Office - பிரதீப் ரங்கநாதனுக்கு செம தீபாவளி.. டியூட் 4வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: பிரதீப் ரங்கநாதன்தான் கோலிவுட்டில் இப்போது பெரிய மகிழ்ச்சியாக இருப்பார். லவ் டுடே, டிராகன், டியூட் என அவர் நடித்த முன்று படங்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கின்றன. ரசிகர்களிடம் மட்டுமின்றி பாக்ஸ் ஆஃபிஸிலும் அவை பெற்றிருக்கும் ரெஸ்பான்ஸ்கள் பிரதீப்பின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்நிலையில் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் மிகப்பெரிய ஹீரோவாக மாறிவிட்டார். லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட்டானபோது; இதெல்லாம் ஃப்ளூக்கில் வந்தது; அவரது நடிப்பை பார்த்தால் இன்னும் மூன்று படங்களுக்குக்கூட தாங்கமாட்டார் என்றுதான் பலர் விமர்சனம் வைத்தார்கள். ஆனால் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்திருக்கும் டியூட் படமும் முதல் இரண்டு படங்களின் ரிசல்ட்டைத்தான் பெற்றிருக்கிறது.
முக்கியமான கதை: கோலிவுட்டில் வன்முறை, சண்டை காட்சிகள், ஹீரோக்களுக்கு துதிபாடும் வகையில் ரீல்ஸ்கள் அடங்கிய தொகுப்பாகத்தான் இந்த வருடத்தில் திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் டியூட் அதையெல்லாம் தாண்டிய ஒரு படமாக இருந்தது. கமர்ஷியல் ஜானரை இயக்குநர் கையில் எடுத்திருந்தாலும் அதில் ஆணவ கொலை விஷயத்தை சேர்த்திருந்த விதம் அனைவரையுமே ரசிக்க வைத்து அவருக்கு பாராட்டை பெற்று தந்தது.

பிரதீப் ரங்கநாதனின் பங்கு: இது ஒருபக்கம் இருக்க சிவகார்த்திகேயன் எப்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என வரிசையாக ஹிட்டுகளை கொடுத்து இன்று உயரத்துக்கு வந்திருக்கிறாரோ அதேபோல்தான் பிரதீப்பின் பயணமும் இருக்கிறது. இந்தப் படம் வரிசையாக அவருக்கு மூன்றாவது ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இளம் ஹீரோக்களில் அவர்தான் முதலிடம் என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.
நல்ல திறமை: அவர் அடிப்படையில் ஒரு இயக்குநர் என்பதால் கதை தேர்விலும், ஆடியன்ஸின் பல்ஸை புரிந்துகொள்வதிலும் கில்லியாக இருக்கிறார். அதிலும் டிராகன் படத்திலும் கமர்ஷியல் ரீதியாக சமூகத்துக்கு தேவையான மெசேஜை சொன்ன பிரதீப்; இந்தப் படத்திலும் அதே ஃபார்முலாவைத்தான் பின்பற்றியிருக்கிறார். அது சக்சஸும் ஆகியிருக்கிறது. அதுமட்டுமின்றி தனது நடிப்பையும் டியூட் படத்தில் மெருகேற்றியிருக்கிறார் அவர்.
உச்சத்தில் மார்க்கெட்: ஒரு படம் ஹிட் கொடுத்தாலே சில பேரை கைகளில் பிடிக்க முடியாது. இவரோ வரிசையாக மூன்று படங்களை மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்திருக்கிறார். நிச்சயமாக அவரது மார்க்கெட் இந்தப் படத்துக்கு பிறகு எகிறியிருக்க வாய்ப்புகள் அதிகம். அவரும் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நான்காவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
எவ்வளவு வசூல்?: அதிகாரப்பூர்வ வசூலை பொறுத்தவரை உலகம் முழுவதும் 66 கோடி ரூபாய் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது. தற்போது Sacnilk இணையதளம் நான்காவது நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் நேற்று 10 கோடி ரூபாயை வசூலித்து மொத்தம் 40.75 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











