Dude Day 8 Box Office - 2வது வாரத்தில் குறைந்த மவுசு.. டியூட் 8வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது. தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விமர்சனம், வசூல் என இரண்டு ஏரியாக்களிலும் படம் கில்லியாக ஓடியது. இந்நிலையில் இரண்டாவது வாரத்தின் முதல் நாளான நேற்று டியூட் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி இப்போது வெற்றிகரமான ஹீரோவாக மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் பிரமாண்ட வெற்றி அவருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று பலரும் அப்போது சொன்னார்கள். அந்த பேச்சை அடுத்து வந்த டிராகன் திரைப்படம் அடித்து நொறுக்கியது. ஹீரோவாக நடித்த முதல் இரண்டு படங்களுமே நூறு கோடி ரூபாயை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காண்பித்தது.
டியூடில் பிரதீப்: மூன்றாவதாக அவர் ஹீரோவாக நடித்த படம்தான் டியூட். கீர்த்திஸ்வரன் என்பவர் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். பிரேமலு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த மமிதா பைஜு இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். மேலும் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது ரிலீஸானது.

படத்துக்கு ஏகோபித்த ஆதரவு: கொஞ்சம் பிசகினாலும் ஏடாகூடாமாக பெயர் எடுத்துவிடும் கதையைத்தான் கையில் எடுத்திருந்தார் இயக்குநர். ஆனால் அதனை மிக நேர்த்தியாக ப்ரெசண்ட் செய்து வெற்றியை சுவைத்துவிட்டார். 2கே கிட்ஸ்களுக்கு ஏற்றவாறும், சமூகத்துக்கு தேவையானதையும் சரியான கலவையில் சொல்லி முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்துவிட்டார் இயக்குநர்.
தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாய்: இந்தப் படமும் வசூலில் நூறு கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது. இதன் மூலம் லவ் டுடே, டிராகன், டியூட் என வரிசையாக மூன்று படங்களிலும் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் ஹீரோ என்ற பெருமையை பிரதீப் பெற்றிருக்கிறார். இனி அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என்பது உறுதி.
எட்டாவது நாள் வசூல்: படம் ரிலீஸாகி நேற்றோடு இரண்டாவது வாரம் ஆரம்பிக்கிறது. இந்நிலையில் எட்டாவது நாளில் படம் செய்திருக்கும் வசூல் தொடர்பான தரவுகளை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நேற்று இப்படம் 0.74 கோடி ரூபாயை வசூலித்ததாகவும்; இந்தியாவில் மொத்தம் இதுவரை 57.24 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது வாரத்தில் படத்தின் மவுசு குறைந்தாலும் செய்ய வேண்டிய சம்பவத்தை முதல் வாரத்திலேயே தரமாக செய்துவிட்டது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











