பாக்ஸ் ஆபிஸில் சொல்லி அடிக்கும் லவ் டுடே… இந்த வாரம் ரிலீஸான படங்களுக்கும் டஃப் கொடுத்த பிரதீப்!

சென்னை: அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன், சந்தானம் நடிப்பில் ஏஜெண்ட் கண்ணாயிரம், சசிகுமாரின் காரி ஆகிய படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகின.

கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் எந்தப் படம் மாஸ் காட்டப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், தொடர்ந்து மூன்றாவது வாரமும் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ரிலீஸ்

இந்த வாரம் ரிலீஸ்

தீபாவளி ரேஸ் முடிந்துவிட்ட நிலையில், கடந்த வாரங்களில் சின்ன பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் அதர்வா, ராஜ்கிரன் நடித்துள்ள பட்டத்து அரசன் திரையரங்குகளில் ரிலீஸானது. லைகா தயாரிப்பில் சற்குணம், பட்டத்து அரசன் படத்தை இயக்கியுள்ளார். குடும்பத்துக்காக கபடி விளையாடும் ஹீரோவாக அதர்வா நடித்துள்ளார். அதர்வாவுடன் ராஜ்கிரன், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஆர்கே சுரேஷ், ராஜ் அய்யப்பா, பால சரவணன், சத்ரு என பலர் நடித்திருந்த போதும், நெகட்டிவான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கியுள்ளது பட்டத்து அரசன். இந்தப் படம் இதுவரை கலெக்‌ஷனில் லட்சங்களை கூட தாண்டவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தானம், சசிகுமார் க்ளீன் போல்ட்

சந்தானம், சசிகுமார் க்ளீன் போல்ட்

அதேபோல், சந்தானம் நடிப்பில் வெளியான 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்துக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. காமெடி கேரக்டரில் நடித்து வந்த சந்தானம், சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். தெலுங்கில் ஹிட் அடித்த ஏஜென்ட் சீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது ஏஜெண்ட் கண்ணாயிரம். ஆனால், தமிழில் சுத்தமாக எடுபடாமல் போன ஏஜெண்ட் கண்ணாயிரம், பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 50 லட்சம் மட்டும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சசிகுமாரின் காரி திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 50 முதல் 60 லட்சம் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சொல்லி அடிக்கும் லவ் டுடே

சொல்லி அடிக்கும் லவ் டுடே

ஆனால், நவம்பர் 4ம் தேதி வெளியான லவ் டுடே இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறதாம். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸான லவ் டுடே, அங்கும் மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ள லவ் டுடே மொத்தம் 85 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்த வாரம் மட்டும் 5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். 2கே கிட்ஸ்களை குறிவைத்து வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

100 கோடி கிளப்பில் இணையுமா?

100 கோடி கிளப்பில் இணையுமா?

உலகம் முழுவதும் இதுவரை 86 கோடி ரூபாய் வசூலித்துள்ள லவ் டுடே விரைல் 100 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான லவ் டுடே, 85 கோடி வசூலை கடந்துள்ளது, கோலிவுட் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து லவ் டுடே படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருவதால், வசூலில் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X