50 கோடியை தட்டி தூக்கிய லவ் டுடே..பாக்ஸ் ஆபிசில் தொடர் சாதனை..கூட்டம் கூட்டமா படையெடுக்கும் மக்கள்!
சென்னை : பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே படம் திரையரங்கில் சக்கைபோடு போட்டு ரூ50 கோடியை அசால்டாக தட்டி தூக்கி உள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார்.
லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு, டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து பட வெளியீட்டுக்காக காத்திருந்தனர்.

லவ் டுடே
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். பிரதீப்பும் இவானாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் விவகாரம் இவானாவின் தந்தை சத்யராஜுக்கு தெரியவருகிறது. இதையடுத்து, சத்யராஜ், இருவரின் போனையும் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அதன் பிறகும் இருவரின் உறவும் சுமுகமாக இருந்தால் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்கிறார்.

வசூலில் மாஸ்
செல்போன் மாறிய பிறகு என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் பெரிதாக கலெக்சன் இல்லை. பின்பு ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டன. பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்து லவ் டுடே வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

படக்குழுவினர் உற்சாகம்
லவ் டுடே திரைப்படம் இதுவரை ரூ 50 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாளில் 3 கோடியாகவும், இரண்டாம் நாள் 5.35 கோடியாகவும், மூன்றாம் நாள் 6.25 கோடியாகவும், ஐந்தாவது நாட்களில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே 50 கோடியை ஈட்டியுள்ளது. படம் வெளியாகி 10 நாளில் ரூ 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளதால் படக்குழுவினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது வரை ரசிகர்கள் திரையரங்குக்கு படையெடுத்து வருவதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராட்டிய சூப்பர் ஸ்டார்
இந்த காலத்து இளசுகளின் காதலை புட்டு புட்டு வைத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். அதேபோல நடிகர் சிலம்பரன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டி உள்ளார். படத்திற்கு நான்கு திசையிலும் இருந்து வந்த பாராட்டால் பிரதீப் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











