மமிதா பைஜுவை காதலிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்?.. பேச்சே சரியில்லையே.. ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்!

ஹைதராபாத்: டியூட் படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இப்படி இருக்கும்போது படத்தின் புரோமோசன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோசனின் போது படத்தின் நாயகி மமிதா பைஜு எங்கே என்று ரசிகர்கள் கேட்டதற்கு, அவர் என் நெஞ்சில் இருக்கிறார் என்று பதில் அளித்தார் பிரதீப் ரங்கநாதன். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் டியூட். இந்த படத்தோடு இவரது நடிப்பில் மற்றொரு படமான லைக் படமும் வெளியாவதாக இருந்தது. கடைசி நேரத்தில் லைக் படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துவிட்டார்கள். இப்படி இருக்கும்போது, டியூட் படத்தின் புரோமோசனில் முழு கவனம் செலுத்தி வருகிறார், பிரதீப் ரங்கநாதன். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஒரு பாடல் ஒன்றையும் பாடி, பாடகராகவும் தனது அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். இதுவரை படத்தில் இருந்து மூன்று பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடல்களும் கவனம் பெற்றுள்ளது.

Pradeep Ranganathan Speech Creates Gossip He Relationship With Mamitha Baiju

மமிதா பைஜு: இந்நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோசனில் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன், சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டார்கள். பிரதீப் ரங்கநாதன் பேசிக் கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மமிதா பைஜு ஏன் வரவில்லை? அவர் எங்கே என்று கேள்வி எழுப்பினர். இது பிரதீப் ரங்கநாதன் காதுகளில் விழ, உடனே அவரோ, மமிதா பைஜு எனது இதயத்தில் இருக்கிறார் என்று தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டினார். மேலும் வெட்கத்தோடு இதை அவர் சொன்னார்.

Pradeep Ranganathan Speech Creates Gossip He Relationship With Mamitha Baiju
Photo Credit:

கிசுகிசு: தொடர்ந்து பேசி அவர், இது சும்மா விளாயாட்டுக்காக சொன்னேன். மமிதா பைஜு தற்போது சூர்யா சாரின் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். வரும் 11ஆம் தேதியில் இருந்து படத்தின் புரோமோசனில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். அதுவும் ஹைதராபாத்திற்கு அவர் கட்டாயம் வருவார் என்றும் தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் விளையாட்டுக்காக நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறிய விஷயத்தை, இருவரும் காதலில் இருக்கிறார்களோ என்று முடிச்சு போட்டு வருகிறார்கள். டியூட் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X