LIK Teaser: 2040ல தமிழ்நாடு இப்படியா இருக்கும்.. பிரதீப் ரங்கநாதனின் LIK டீசரே தாறுமாறா இருக்கே!
சென்னை: இந்த ஆண்டு தீபாவாளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியல் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மட்டும் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது. அதில் ஒரு படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், LIK அதாவது, லவ் இன்சுரன்ஸ் கொம்பனி. அதேபோல் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான ட்யூட். இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தற்போது LIK படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
LIK படத்தை விஜய்யின் லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படக்குழு: படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, ஆனந்தராஜ், யோகி பாபு, சீமான், மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் பாடல் ஏற்கனவே ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்கும்போது, படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் 2040 இல் நடைபெறுவது போன்ற கால ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே ரசிகர்களுக்கு புதியதாக உள்ளது. ஆகாயத்தில் பறக்கும் கார்கள், டிஜிட்டல் குடை, எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தமிழ்நாடு என்றைக்கும் தமிழை உயர்த்திப் பிடிக்கும் என்பது போல டாக்ஸி கம்பெனிக்கு தமிழில் பெயர் என மொத்தமாக கவனத்தை ஈர்த்துவிட்டது.

அடுத்த ஹிட் பார்சல்: இந்த டீசரை பார்த்த பலரும் டீசர் நன்றாக இருப்பதாகவும், உண்மையிலேயே தமிழ்நாடு 2040இல் அதாவது இன்னும் 15 ஆண்டுகளில் இப்படி மாறிவிடுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படி மாறினால் கூட நன்றாகத்தானே இருக்கும் என்றும், டீசரில் எங்கே சீமானைக் காணவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர் டீசரைப் பார்த்தாலே தெரிகிறது, படம் 2கே கிட்ஸ்களுக்கான படமாக இருக்கப்போகிறது. இதனால் படம் கன்ஃபார்ம் ஹிட் அடிக்க உள்ளது, அதனால் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு ஹிட் பார்சல் என்றும் பேசி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











