Dude Box Office - முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் அடித்து ஆடும் டியூட் பிரதீப் ரங்கநாதன்.. இவ்வளவு வசூலா?

சென்னை: கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டியூட் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. வரிசையாக இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்து நூறு கோடி ரூபாய் கலெக்ட் செய்த பிரதீப் ரங்கநாதன் இதிலும் அடித்து ஆடுவார் என்று எதிர்பார்ப்பு பலரிடமும் எழுந்திருந்தது. இந்நிலையில் இதுவரை படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் 2கே கிட்ஸ் மத்தியில் செல்வாக்கு உள்ள ஹீரோவாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். ஏனெனில் லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட்டாக அமைந்துவிட்டன. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சக்கைப்போடு போட்டன. தொடர்ச்சியாக அவரது படங்கள் நூறு கோடி ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்தது.

டியூட் பிரதீப் ரங்கநாதன்: இரு மெகா ஹிட்டுகளுக்கு பிறகு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எந்த மாதிரியான கதைக்களத்தோடு அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார் என்ற ஆவல் பலரிடமும் இருந்தது.

Pradeep Ranganathan s Dude Day 1 Box Office is 3 97 crores so far Here are details
Photo Credit:

படம் எப்படி?: அதேபோல் பிரதீப் ரங்கநாதனுக்காகவும் படத்துக்கு ஹைப் ஏறியிருந்தது. இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு இன்று படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். படத்தின் ஒன்லைன் இதற்கு முன்னதாக பல படங்களில் வந்திருந்தாலும் கீர்த்திஸ்வரன் இயக்கம் நன்றாகத்தான் இருந்தது; அதேசமயம் இன்னும் கொஞ்சம் எஃபர்ட் போட்டிருக்கலாம் என்பதுதான் ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

டியூட் வசூல் எவ்வளவு?: விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் வசூலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி இதுவரை இப்படமானது 3.97 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். முதல் காட்சியில் 33.94 விழுக்காடு ஆக்கிரமித்திருந்த அந்தப் படம் மதிய காட்சியில் 45.75 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது. இன்னும் இரண்டு காட்சிகள் இருப்பதால் முதல் நாள் வசூல் பாசிட்டிவ்வில் செல்லவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

டிராகனை முந்துமா?: இதற்கிடையே Sacnilk தள தரவுகள்படி இந்தப் படத்துக்கு முன் பிரதீப் நடித்திருந்த டிராகன் முதல் நாளில் 6.5 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. தற்போது டியூடும் முதல் இரண்டு காட்சிகளுக்கே நல்ல வசூலை பெற்றிருப்பதால் கண்டிப்பாக டிராகன் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய தாக்கத்தை டியூட் உண்டாக்கும் என்ற கணிப்புகளும் வெளியாக தொடங்கியிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X