Dude Day 7 Box Office - ரிலீஸாகி ஒரு வாரம் ஓவர்.. டியூட் 7வது நாள் வசூல்..கொஞ்சம் கொஞ்சமா குறையுதே?
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டியூட் திரைப்படம் நூறு கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. சூழல் இப்படி இருக்க ஏழாவது நாளான நேற்று அப்படம் இந்தியாவில் மட்டும் எத்தனை கோடி வசூலை அள்ளியிருக்கிறது என்பதை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருக்கும் டியூட் கடந்த 17ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸானது. இப்படத்துக்கு போட்டியாக பைசன், டீசல் ஆகிய இரண்டு படங்கள் வந்தன. பிரதீப் ரங்கநாதன் இதில் ஹீரோ என்பதால் டியூட் மீது அத்தனை பேரின் கண்களும் இருந்தன. டிக்கெட் புக்கிங்கிலும் மற்ற இரண்டு படங்களைவிடவும் இதுதான் மாஸ் காண்பித்தது. அதன் மூலம் 2கே கிட்ஸ் மத்தியில் பிரதீப்புக்கு இருந்த செல்வாக்கும் புலப்பட்டது.
கொண்டாடிய ரசிகர்கள்: டிராகன் படம் போலவே இதுவும் கமர்ஷியல் ஜானரில் பயணித்து சமூகத்துக்கு தேவையான ஆணவ கொலைக்கு எதிரான மெசேஜை சொல்லியது. முதல் பாதி படு வேகமாக சென்று இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் பெரிதாக ரசிகர்களை புலம்ப வைக்கவில்லை. இதன் காரணமாக படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
சரத், பிரதீப் சூப்பர்: படத்தின் இரண்டு தூண்களாக இருந்தது என்றால் சரத்குமாரும், பிரதீப் ரங்கநாதனும்தான். இதில் ஏற்றிருந்த கதாபாத்திரம் போல் இதற்கு முன்னர் சரத் ஏற்றதில்லை. காமெடி, வில்லத்தனம் என இரண்டையும் சரியான மீட்டரில் டெலிவர் செய்து அப்ளாஸை அள்ளினார். அதேபோல் பிரதீப் ரங்கநாதனும் தனது துறுதுறு நடிப்பாலும், ஸ்டைலாலும் கலக்கினார். மேலும் எமோஷனல் சீனிலும் கைத்தட்டல்களை பெற்றார்.

ஹாட்ரிக் அடித்த பிரதீப்: வசூலில் முதல் நாளிலிருந்தே டாப் கியரில்தான் படம் சென்றுகொண்டிருந்தது. எனவே தொடர்ச்சியாக மூன்றாவது முறை நூறு கோடி ரூபாய் கிளப்பில் பிரதீப் இணைவார் என்று கணிக்கப்பட்டிருந்தது. கணிப்புப்படியே படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
குறைந்த வசூல்: இந்நிலையில் நேற்றோடு படம் வெளியாகி ஒருவாரம் நிறைவடைகிறது. தற்போது ஏழாவது நாளான நேற்று இந்தியாவில் மட்டும் டியூட் செய்த வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அந்தத் தள தரவுகள்படி நேற்று 2.25 கோடி ரூபாய் கலெக்ட் செய்து; ஏழு நாட்களில் இந்தியாவில் 56.55 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. வசூல் கொஞ்சம் குறைய ஆரம்பித்தாலும் ஏற்கனவே படம் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டதால் இதுவும் லவ் டுடே, டிராகன் வரிசையில் பிரதீப்புக்கு பிளாக்பஸ்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











