Dude Official Box Office: 10 கோடி எல்லாம் இல்லை.. டியூட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் இத்தனை கோடியாம்!

சென்னை: தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயனின் முதல் நாள் வசூலை முந்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். தமிழ்நாட்டில் மட்டுமே டியூட் படத்தின் வசூல் 7 கோடி தான் என்றும் இந்தியளவில் 3 கோடி வசூல் என்றும் ஒட்டுமொத்தமாக 10 கோடி வசூலை இந்தியாவில் டியூட் முதல் நாளில் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் வெப்சைட்டான சாக்னிக் தெரிவித்திருந்தது.

ஆனால், படம் வெளியான 2வது நாளே வெற்றி விழாவையும் தீபாவளி வின்னர் டியூட் தான் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஹைதராபாத்தில் நடத்திய விழாவில் பிரதீப் ரங்கநாதன் பங்கேற்று தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Pradeep Ranganathan s Dude movie Day 1 Official Box Office Reports out

லவ் டுடே, டிராகன் படங்களை விட டியூட் அதிகளவில் வசூல் செய்தது சந்தோஷம் என்று பிரதீப் ரங்கநாதன் கூறிய நிலையில், அதிகாரப்பூர்வ வசூலை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டு தீபாவளி வின்னர் பிரதீப் ரங்கநாதன் தான் என்பதை அறிவித்துவிட்டது.

டியூட் முதல் நாள் வசூல்: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடிப்பில் அக்டோபர் 17ம் தேதி வெளியான டியூட் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 22 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டியூட் படத்தின் வசூல் 10 கோடி எல்லாம் இல்லை பாஸ் 22 கோடி ஓபனிங் கொடுக்கும் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் எங்கேயோ போய்விட்டார் என கொண்டாடி வருகின்றனர். 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி முதல் நாளிலேயே 22 கோடி வசூல் செய்வதுதான் ரியல் வெற்றி என்றும் கூறுகின்றனர்.

தீபாவளி வின்னர்: துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் 2.5 கோடி வரை முதல் நாளில் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியான நிலையில், அதை விட 10 மடங்கு அதிக வசூலை பெற்று பிரதீப் ரங்கநாதன் தீபாவளி வின்னராக மாறியுள்ளார் என அவரது ரசிகர்கள் காளமாடனை காலி செய்த டியூட் என சோஷியல் மீடியாவில் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

சூர்யா, தனுஷ்: இந்த ஆண்டு வெளியான சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் படங்களை விட முதல் நாள் வசூலில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் தான் டாப் கியரில் எங்கேயோ போய்விட்டது என்றும் தீபாவளி விடுமுறைக்குள் படம் 100 கோடியை அடிக்கும் என்றும் கூறுகின்றனர். அதே சமயம் பிரதீப் ரங்கநாதனுக்கும் வடை சுட ஆரம்பித்து விட்டனர் என்றும் கடைசியில் வசூல் எங்கே போய் முடிகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம் என்றும் ட்ரோல்களும் பரவத் தொடங்கியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X