Dude Day 1 Box Office - பிரதீப் ரங்கநாதன் மாஸ் காண்பிக்கிறாரே.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?.. வேற லெவல்
சென்னை: கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. படத்தில் மைனஸ்கள் இருந்தாலும் ரசிகர்களை படம் கவர்ந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க அப்படம் முதல் நாளான நேற்று செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த முறையும் வசூலில் அவர் மாஸ் காண்பிக்கவே செய்திருக்கிறார் என்று தெரிகிறது.
சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இருந்த கீர்த்திஸ்வரன் டியூட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, டிராவிட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பிரதீப்பின் படம் என்பதால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. லவ் டுடே, டிராகன் போன்று இந்தப் படத்தையும் வெற்றியாக கொடுத்து ஹாட்ரிக் அடிப்பாரா என்ற கேள்வியும் பலரிடம் இருந்தது.
எப்படி இருக்கு படம்: படம் பார்த்த பலரும் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். பிரதீப் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அது ரசிக்கும்படிதான் இருந்தது. மமிதா பைஜு, சரத்குமார் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை மிகச்சிறப்பாக செய்திருந்ததால் படம் முழுவதுமே ரசிகர்கள் என்கேஜாகவே இருந்தார்கள். டியூட் தங்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருப்பதாகவே அவர்கள் சோஷியல் மீடியாவில் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

முக்கியமான படம்: அதிலும் ஜென் ஸி தலைமுறைக்கேற்ப படத்தை இயக்குநர் உருவாக்கியிருந்தாலும்; அதில் ஆணவ கொலையை பேசிய விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. முதல் படத்தை கமர்ஷியல் படமாக கொடுத்திருந்தாலும் அதில் ஸ்ட்ராங்கான மெசேஜை சொல்லியிருக்கும் இயக்குநர் கீர்த்திஸ்வரனை பலரும் பாராட்டிவருகிறார்கள். கண்டிப்பாக பிரதீப் ரங்கநாதன் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் என்பதுதான் உண்மை.
சாய் அபயங்கரின் இசையும் நன்று: படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்ன செய்திருப்பார் என்ற பார்வையும் அனைவரிடமும் எழுந்திருந்தது. அவரும் தனது பங்குக்கு படத்தை தூக்கி நிறுத்தியிருந்தார் என்றே சொல்ல வேண்டும். விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் படம் வசூல் ரீதியாகவும் கெத்து காண்பித்திருக்கிறது. இந்நிலையில் முதல் நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
எவ்வளவு வசூல்: அந்த இணையதள கூற்றுப்படி டியூட் திரைப்படம் நேற்று மட்டும் மொத்தம் பத்து கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இன்னும் மூன்று நாட்கள் வரிசையாக விடுமுறை தினம் என்பதாலும், முதல் நாளிலிருந்தே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியிருப்பதாலும் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக வசூலில் நல்ல நிலையை டியூட் படம் எட்டும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிராகனை பீட் செய்த டியூட்: அதுமட்டுமின்றி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த டிராகன் திரைப்படம் முதல் நாளில் ஆறு கோடி ரூபாயை வசூலித்தது. டியூடோ பத்து கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படமும் நூறு கோடி ரூபாய் கிளப்பில் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கருத்துக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











