»   »  தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்

தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஜர் ஃபெடரர் சொன்னது நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நாடாலும் மோதினர்.

Prakash Raj admires true sportsman Federer

இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஃபெடரர் நாடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இது ஃபெடரர் வென்றுள்ள 18வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை ஆகும்.

கோப்பையை வென்ற ஃபெடரர் கூறுகையில்,

டென்னிஸ் கடினமான விளையாட்டு. இங்கு டிரா இல்லை ஆனால் அப்படி இருந்திருந்தால் நான் சந்தோஷமாக ரஃபாவுடன்(நாடால்) ஷேர் செய்திருப்பேன் என்றார்.

ஃபெடரரின் இந்த கருத்து நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஃபெடரரிடம் நாடால் தோற்றதை நினைத்து தனுஷ் இதயம் நொறுங்கிப் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Prakash Raj loved the way tennis player Roger Federer spoke after winning Australian open on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil