»   »  தீபிகா தலைக்கு ரூ. 10 கோடி, ஜிஎஸ்டி சேர்த்தா சேர்க்காமலா?: பிரகாஷ் ராஜ் கிண்டல்

தீபிகா தலைக்கு ரூ. 10 கோடி, ஜிஎஸ்டி சேர்த்தா சேர்க்காமலா?: பிரகாஷ் ராஜ் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபிகாவின் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது ஜிஎஸ்டியையும் சேர்த்தா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் மத்திய அரசை நச்சு நச்சுன்னு கேள்வி கேட்டு வருகிறார். #justasking(சும்மா கேட்கிறேன்) என்று ஹேஷ்டேக் போட்டே பல கேள்விகளை கேட்கிறார்.

தீபிகா, பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 5 கோடி பரிசு என்று ஒருவரும், ரூ. 10 கோடி பரிசு என்று பாஜக நிர்வாகியும் அறிவித்துள்ளனர்.

 ரிலீஸ்

ரிலீஸ்

பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டலால் தீபிகா, பன்சாலியின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி

ஒரு நடிகை, இயக்குனரின் தலையை வெட்ட ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளரோ ரூ. 10 கோடி அறிவித்துள்ளார். பணமதிப்பிழப்புக்கு பிறகு இவ்வளவு பெரிய தொகை பரிசா...இதில் ஜிஎஸ்டி சேர்கப்பட்டுள்ளதா.. என்று ட்வீட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

 ஐலவ்யூ

ஐலவ்யூ

பிரகாஷ் ராஜின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ செல்லம் ஐ லவ் யூ செல்லம். நாங்கள் நினைத்தோம் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

 சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

பிரகாஷ் ராஜ் கேட்ட ஜிஎஸ்டி கேள்வியை வைத்து மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் சுற்றவிட்டுள்ளனர்.

English summary
Actor Prakash Raj asked whether Rs. 5 crore and Rs. 10 crore prize announced for beheading actress Deepika Padukone and Padmavati director Sanjay Leela Bhasali includes GST. He is asking this since this prize amount is announced after demonetization.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil