ராமரையே மதிக்காத பிரகாஷ் ராஜ்...சரியாக காய் நகர்த்தும் விஷ்ணு மஞ்சு

ஐதராபாத் : MAA (Movie Artistes Association) தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தெலுங்கு திரையுலகமே பரபரப்பாக உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் இருந்து பந்தல கணேஷ் மற்றும் சிவிஎல் நரசிம்ம ராவ் ஆகியோர் பாதியிலேயே விலகிக் கொண்டனர். இதனால் பிரகாஷ் ராஜ் மற்றும் தெலுங்கு பிரபல ஹீரோ மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு இடையே நேரடி மோதல் நிலவுகிறது. கடும் எதிர்ப்புக்களை கடந்தே இந்த தேர்தலில் பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார்.

நினைவுபடுத்திய விஷ்ணு

நினைவுபடுத்திய விஷ்ணு

சங்க உறுப்பினர்களிடம் பேசி பிரகாஷ் ராஜ் மற்றும் விஷ்ணு ஆகியோர் ஓட்டு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் 2019 ல் ராம் லீலா பற்றி பிரகாஷ் ராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நினைவுபடுத்தி விஷ்ணு பேசி உள்ளது, புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.

பிரகாஷ் ராஜின் சர்ச்சை பேச்சு

பிரகாஷ் ராஜின் சர்ச்சை பேச்சு

2019 ல் பேட்டி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், ராம் லீலாவையும் குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுப்பதையும் ஒப்பிட்டு பேசினார். மேலும் ராம் லீலா போன்றவைகள் நாட்டிற்கே மிகுந்த ஆபத்தானவை என பேசினார். இதற்கு இந்து அமைப்புக்கள் பலவும் பிரகாஷ் ராஜிற்கு எதிராக போராட்டங்களை நடத்தின. பலர் பிரகாஷ் ராஜிற்கு கண்டனம் தெரிவித்தனர்.

அவரை ராமரையே மதிக்கல

அவரை ராமரையே மதிக்கல

இந்நிலையில் பிரகாஷ் ராஜின் இந்த பேச்சை விஷ்ணு மஞ்சு குறிப்பிட்டு பேசி உள்ளார். அதில் அவர், அவர் என்னை விமர்சித்து பேசி வருகிறார் என்பதற்காக எனக்கு பிரகாஷ் ராஜ் மீது எந்த கோபமும் இல்லை. அவர் கடவுள் ராமரை மதிக்காத போது, நான் யார். நான் சாதாரண மனிதன்.

மத பிரிவினை பேசவில்லை

மத பிரிவினை பேசவில்லை

நான் மத பிரிவினை பற்றி பேசவில்லை. எனது மனைவி ஒரு கிறிஸ்தவர். எனது சைத்துனர் எங்க ஜாதி இல்லை. எங்கள் குடும்பம் ஜாதி பாகுபாடுகளை பார்க்காதது என்றார். மேலும் கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி பற்றி பிரகாஷ் ராஜ் அவதூறாக பேசிய பேச்சுக்களையும் விஷ்ணு நினைவுபடுத்தி உள்ளார்.

கடுமையாக பேசிய பிரகாஷ் ராஜ்

கடுமையாக பேசிய பிரகாஷ் ராஜ்

பல மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் 2019 பொதுத் தேர்தலின் போது பாஜக.,விற்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் பாஜக, இந்து அமைப்புக்கள் ஆகியவற்றின் எதிர்ப்பை சம்பாதித்தார் பிரகாஷ் ராஜ். சரியாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரகாஷ் ராஜின் பழைய பேச்சுக்களை விஷ்ணு நினைவுபடுத்தி உள்ளது, பிகாஷ் ராஜிற்கு எதிரான மனநிலையை அனைவரின் மனதிலும் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X