»   »  சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரியின் உடலுக்கு பிரகாஷ் ராஜ் அஞ்சலி

சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரியின் உடலுக்கு பிரகாஷ் ராஜ் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் உடலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அஞ்சலி செலுத்தினார்.

மூத்த கன்னட பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் இருக்கும் அவரின் வீட்டு வாசலில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

கவுரியின் மீது மூன்று குண்டுகள் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கவுரி லங்கேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு டவுன் ஹாலில் உள்ள ரவீந்திர கலாக்ஷேத்ராவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் பிரகாஷ் ராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று கவுரிக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் கவுரியின் மறைவால் வாடும் அவரின் தாய்க்கு ஆறுதல் கூறினார் பிரகாஷ் ராஜ்.

English summary
Actor Prakash Raj paid his last respect to noted journalist Gauri Lankesh who was shot dead at her home in Bengaluru last evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil