»   »  ”ஜாலி எல்.எல்.பி” ரீமேக்... பொமன் இரானி வேடத்தில் பிரகாஷ் ராஜ்?

”ஜாலி எல்.எல்.பி” ரீமேக்... பொமன் இரானி வேடத்தில் பிரகாஷ் ராஜ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட்டில் வெளிவந்த "ஜாலி எல்.எல்.பி" என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் பொமன் இரானி நடித்திருந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜாலி எல்.எல்.பி. இந்த படத்தில் அர்ஷத் வர்ஷி மற்றும் பொமன் இரானி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொமன் இரானி :

பொமன் இரானி :

தற்போது இப்படத்தில் பொமன் இரானி நடித்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.

நடிக்கவும் முடிவாம்:

நடிக்கவும் முடிவாம்:

முதலில் இந்த படத்தை தயாரிக்க மட்டுமே முடிவு செய்த உதயநிதி, இந்த படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இவர்கள் நடிப்பது உறுதியாகிவிட்டால் இருவரும் இந்த படத்தில் வழக்கறிஞர்களாக நடிப்பார்கள்.

நகைச்சுவை எல்.எல்.பி:

நகைச்சுவை எல்.எல்.பி:

நீதித்துறையில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்லிய படம் ஜாலி எல்.எல்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒருமுறை:

ஏற்கனவே ஒருமுறை:

பிரகாஷ்ராஜ் ஏற்கெனவே இந்தியில் "முன்னாபாய் எம்.பி.பி.எஸ்" என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பொமன் இரானி நடித்திருந்த டீன் கதாபாத்திரத்தில் கலக்கலாக நடித்திருந்தார்.

வித்தியாச நடிப்பிற்கு பேர் போனவர்:

வித்தியாச நடிப்பிற்கு பேர் போனவர்:

அதேபோல், இந்த படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்வார் என தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
South Indian actor Prakash Raj will don the role of the defence lawyer in the Tamil remake of Jolly LLB, a Hindi work directed by Subhash Kapoor in 2013.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil