»   »  'ரஜினிக்கு தெரியாத விஷயமா... அதான் நம்பி ஒரு முடிவெடுத்திருக்கார்!'- பிரகாஷ்ராஜ்

'ரஜினிக்கு தெரியாத விஷயமா... அதான் நம்பி ஒரு முடிவெடுத்திருக்கார்!'- பிரகாஷ்ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் ரஜினிக்குத் தெரியாத விஷயமில்லை. ஆனா நம்பி ஒரு முடிவெடுத்து இளையதலைமுறையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிறார், என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

'இளைய தலைமுறை இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களோடு படங்கள் பண்ண ரஜினி, கமல் இறங்கி வந்திருக்காங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க?' என்ற கேள்விக்கு பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பதில் இது:

Prakash Raj praises Rajinikanth

‘‘அதுதானே அழகு. ராஜேஷ் என்ற இளைஞனோடு கமல் சார் வொர்க் பண்ண முடியுது. ஒரு ரஞ்சித்தோட ரஜினி சார் வொர்க் பண்ண முடியுது. அவங்க ஒரு உதாரணமா இருக்காங்கல்ல.

‘கபாலி' முதல் நாள் ஷூட்டிங்னு ஒரு போட்டோ பார்த்தேன். ‘கபாலி' நானும் பண்ண வேண்டியது. ஆனால் நிறைய டேட்ஸ் தேவைப்பட்டுச்சு. நான் ஏற்கெனவே நிறையப் படங்களை ஒப்புக்கிட்டேன். அந்தப் படத்தை மிஸ் பண்ணினதுக்கு ரொம்ப வருத்தப்படுறேன். அந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்தப்ப அந்த வருத்தம் இன்னும் அதிகமானது என்பது உண்மை. அவரைச் சுத்தி இருக்கும் அந்தப் பட்டாளத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் திறமைசாலி இளைஞர்களைப் பார்க்கும்போது அவங்க யாருமே ஷோவா இல்லை, வழக்கமான சினிமா முகமா இல்லை. ஜெயிச்சவங்க அல்ல. பசியோட இருக்கிற ஒரு கும்பல். அதுல விரசம் இல்லை.

ரஜினிக்குத் தெரியாத விஷயமா. நம்பி முடிவெடுக்கிறார்னா அவர் உணர்ந்திருக்கார். கமல் சார், ரஜினி சார் அவங்களே உணர்ந்திருக்காங்கன்னா, அந்த அனுபவம் அழகுன்னுதானே அர்த்தம்!''

English summary
Prakash Raj praises Rajinikanth's decision to work with fresh youngsters in forthcoming movies.
Please Wait while comments are loading...