செல்லம்...நான் வந்துட்டேன்...வாரிசு பற்றி சூப்பரா சொன்ன பிரகாஷ்ராஜ்
சென்னை : டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பைலிங்குவல் படமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

தொடர்ந்து கசியும் ஷுட்டிங் போட்டோ
மற்றொரு புறம் வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களுடன் அப்செட்டில் உள்ளனர். வாரிசு படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

பிரகாஷ் ராஜ் ரோல் என்ன
வாரிசு படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, இவர்களுடன் பிரபு, சரத்குமார், குஷ்பு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த பிரகாஷ்ராஜ் வில்லன் கிடையாது. அதே சமயம் மிக முக்கியமான ரோலில் தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

செல்லம்...We are back
இந்த நிலையில் டிவி ஒன்றிற்கு பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டியின் போது அவரிடம் வாரிசு படம் பற்றியும், அதில் பிரகாஷ் ராஜின் ரோல் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், வாரிசு...விஜய்யின் படம். செல்லத்தோட வேலை பார்த்து 15 வருஷம் ஆச்சு. மிகப் பெரிய கேப். கதையை சொல்லலாமா? வேணாமா ? தெரியாது. செல்லம்...We are back ன்னு சொல்ல தோணுது. இது மிகவும் இன்ட்ரெஸ்டிங்கான படம் என்றார்.

தமிழில் ரீ என்ட்ரி
ஆரம்பத்தில் தமிழில் அதிக படங்களில் நடித்து வந்த பிரகாஷ் ராஜ், பிறகு மற்ற மொழிகளில் பிஸியானார். தமிழில் 2019 ல் அசுரன், அழியாத கோலங்கள் 2 ஆகிய படங்களில் நடித்தவர், அதற்கு பிறகு 2021 ல் தான் ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து அண்ணாத்த, எனிமி, கிளாப் படத்திற்கு பிறகு சமீபத்தில் ரிலீசான பொய்க்கால் குதிரை, விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இனி வரிசையா கலக்கல் தான்
இவர் தமிழில் நடித்துள்ள திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதைத் தொடர்ந்து வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் வில்லன் ரோல்களில் மட்டுமே நடித்த பிரகாஷ்ராஜ், பிறகு கேரக்டர் ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக விஜய்யுடன் இணைந்து கில்லி படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் காமெடி கலந்த வில்லனாக, செல்லம் என இவர் பேசும் டயலாக் செம பாப்புலர்.

இது தான் பிரகாஷ் ராஜ் ரோலோ?
தற்போது மீண்டும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார் பிரகாஷ் ராஜ். கில்லி படத்தில் வரும் செல்லம் டயலாக்கை குறிப்பிட்டு பிரகாஷ் ராஜ் பேசி உள்ளதால் இந்த படத்திலும் அவருக்கு ஜாலியான ஒரு ரோல் கொடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications