»   »  இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா சரத்குமார்? - பிரகாஷ் ராஜ்

இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா சரத்குமார்? - பிரகாஷ் ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: தலைமைப் பொறுப்பில் உள்ள சரத்குமார் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Prakash Raj slams Sarath Kumar

இதையொட்டி சேலம், நாமக்கல்லில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், கருணாஸ், சரவணன், அஜய்ரத்னம், மனோபாலா உள்ளிட்டோர் சனிக்கிழமை சேலம் வந்தனர்.

சேலத்தில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து விஷால், நாசர் தலைமையிலான அணிக்கு ஆதரவு தரும்படி கோரினர்.

இதைத்தொடர்ந்து, நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறோம். யாரையும் குறைகூற இங்கு வரவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும்.

சரத்குமார் எனது நண்பர். ஆனால், அவர் தவறான இடத்தில் உள்ளார். எதிரணியினர் அரசியல், சாதியைப் புகுத்துகின்றனர். கலைஞர்களுக்கு சாதி, மத பாகுபாடு கிடையாது.

நடிகர் சங்கத் தேர்தலில் புரட்சி ஆரம்பிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும், மாற்றத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை இருக்காது என சரத்குமார் கூறுவது அநாகரிகமானது. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் வாழ முடியாது. மேலும், தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. அதேபோல, சங்க உறுப்பினர்களை பயமுறுத்தக்கூடாது.

நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கேள்விக் கேட்கும் உரிமை உண்டு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர். அப்படியானால் ஏதோ நடக்கிறது என்றுதானே அர்த்தம். நான் யாருக்கும் பயப்படவில்லை. எனக்குப் பதவி வேண்டாம். ஆனால், நடிகர் சங்கத்தில் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். இந்தத் தேர்தல் நடிகர் சங்கத் தேர்தலை மாற்றக்கூடியது. ஒன்றுசேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்."

நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்கள் தபால் வாக்கு அளிக்காமல் சென்னைக்கு வந்து வாக்களிக்க வேண்டும். மேலும், உறுப்பினர் அடையாள அட்டையை மிரட்டி வாங்கி வைத்திருக்கின்றனர் என்றார்.

English summary
Actor Prakash Raj alleged that Nadigar Sangam President Sarath Kumar's activities looks irresponsible.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil