அந்த கட்சியில் சேரப் போறீங்களா விஷால்.. பிரகாஷ் ராஜ் கேட்ட நறுக் கேள்வி.. டிரெண்டாகும் ட்வீட்!

சென்னை: நடிகர் விஷால் பிரதமர் மோடியை புகழ்ந்து ட்வீட் போட்ட நிலையில், பதிலுக்கு மோடி நன்றி தெரிவித்து இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கங்கனா ரனாவத்தை தொடர்ந்து நடிகர் விஷாலும் பாஜகவில் இணைய போகிறாரா என்கிற பரபரப்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நடிகரும் அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜ் நடிகர் விஷாலை கலாய்த்து போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

படங்கள் ஓடுவதில்லை

படங்கள் ஓடுவதில்லை

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக இரும்புத்திரை படம் மட்டுமே ஓடியது. அதற்கு முன்பும் அதற்கு பின்பும் விஷால் நடித்த பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஆனாலும் தொடர்ந்து லத்தி, மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இந்நிலையில், அரசியலில் இறங்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரசியலில் ஆர்வம்

அரசியலில் ஆர்வம்

நடிகர் விஷாலுக்கு உள்ள அரசியல் ஆர்வம் தான் அவரை நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் உள்ளிட்டவற்றில் பங்குபெற செய்தது. தற்போது அடுத்த கட்டமாக நேரடி அரசியலிலேயே அவர் களம் காண உள்ளார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜகவில் சேரப் போகிறாரா என்கிற கேள்வி கிளம்பி இருக்கிறது.

காசிக்கு விசிட்

காசிக்கு விசிட்

இந்நிலையில், சமீபத்தில் காசிக்கு விசிட் அடித்த நடிகர் விஷால் அங்கே சாமி தரிசனம் செய்தார். மேலும், கங்கையிலும் புனித நீராடினார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால் பிரதமர் மோடியை டேக் செய்து நன்றி கூறியுள்ளார்.

மோடிக்கு நன்றி

மோடிக்கு நன்றி

காசி நகரம் முன்பு இருந்ததை போல இல்லாமல், ரொம்பவே புணரமைக்கப்பட்டு அழகாகவும் யார் வேண்டுமானாலும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்லும்படி எளிமையாகவும் மாறி உள்ளது. கங்கையில் நீராடினேன். இப்படி காசியை அழகாக மாற்றியதற்காக உங்களுக்கு ரொம்ப நன்றி மோடி என பிரதமருக்கு விஷால் நன்றி தெரிவித்து இருந்தார்.

 மோடி மகிழ்ச்சி

மோடி மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி.. உங்களுக்கு காசியில் நல்ல பயண அனுபவம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன் என நடிகர் விஷாலுக்கு மோடி போட்டிருக்கும் ட்வீட் தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் சும்மா இருப்பாரா உடனடியாக தனது ஜஸ்ட் ஆஸ்கிங் ஹாஷ்டேக்கை தட்டி ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரகாஷ் ராஜ் கிண்டல்

பிரகாஷ் ராஜ் கிண்டல்

"Shot Ok.... Next ??? ... #justasking" என நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் விஷாலை பார்த்து கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார். நடிப்பு நல்லா இருக்கு, அடுத்து பாஜகவில் இணையப் போகிறீர்களா என்று தான் பிரகாஷ் ராஜ் கேட்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத்தும் ஓப்பனாக தான் பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திப்பேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பு, பேரரசு உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X