»   »  ஹைதராபாத்தில் த்ரிஷாவுக்கு பாடிகார்டாக மாறிய பிரகாஷ்ராஜ்

ஹைதராபாத்தில் த்ரிஷாவுக்கு பாடிகார்டாக மாறிய பிரகாஷ்ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மீடியாக்கள் கேள்வி கேட்கும் முன்பு த்ரிஷாவை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்து வருபவர் த்ரிஷா. அவர் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் அழகாகவும், சிக்கெனவும் உள்ளார். அவர் என்ன தான் பிரியாணியை மூக்குமுட்ட சாப்பிட்டாலும் அதற்கேற்ப ஜிம்மில் ஒர்க்அவுட் செய்துவிடுகிறார்.

காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயம் ஆனது.

திருமணம்

திருமணம்

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அவரது திருமணம் நின்றுவிட்டது. திருமணம் நின்ற பிறகு த்ரிஷா பட வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

மீடியா

மீடியா

திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டதால் மீடியாவை பார்க்க அஞ்சுகிறாராம் த்ரிஷா. பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் திருமணம் நின்றுவிட்டது பற்றி கேட்பார்களே என்ன பதில் அளிப்பது என தயங்குகிறாராம்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

கமல் ஹாஸன் நடிக்கும் தூங்காவனம் தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சீகட்டி ராஜ்ஜியம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கமல் ஹாஸன், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

த்ரிஷா

த்ரிஷா

பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும் த்ரிஷா அந்த இடத்தில் இருந்து நைசாக கிளம்ப நினைத்தார். இருந்தால் எங்கே பத்திரிக்கையாளர்கள் வருண் மணியன் பற்றி கேட்பார்களோ என்று நினைத்தாராம். அங்கிருந்து அவர் நைசாக கிளம்ப உதவி செய்தது வேறு யாரும் இல்லை நம்ம செல்லம் பிரகாஷ் ராஜ் தான்.

English summary
Prakashraj has helped Trisha to left the venue of Cheekati Rajyam press meet in Hyderabad as she wants to avoid media after her broken engagement.
Please Wait while comments are loading...