»   »  முதல் கோணல்.... ஞானவேல் ராஜா, பிரகாஷ்ராஜின் மிரட்டல் அணுகுமுறை!

முதல் கோணல்.... ஞானவேல் ராஜா, பிரகாஷ்ராஜின் மிரட்டல் அணுகுமுறை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் தலைமையில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே ரவுடிகளை மிரட்டும் தாதா போல நிர்வாகி ஞானவேல் ராஜா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிக்கைகள், டிவி ஊடகங்கள் இருக்கும் போதே, "எங்களுக்கு இன்னொரு முகம் இருக்கு. சத்தமில்லாம செய்துட்டு போயிடுவோம்," என்பது போன்ற வார்த்தைகளை ஞானவேல் ராஜா யாருக்காக பயன் படுத்தினார். முதல் கூட்டத்திலேயே இது போன்ற மிரட்டல் வார்த்தைகளை அவர் பயன்படுத்தும் போது அருகில் இருந்த விஷாலும், பிரகாஷ்ராஜூம் கைதட்டி வரவேற்பு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Prakashraj and Gnavel Raja threatening journalists

சினிமாவில் பேசும் டயலாக் போலவே பொது வெளியிலும் இந்த நிர்வாகம் பேசத் தொடங்கி இருப்பது அவர்களின் பலவீனத்தையும், பயத்தையுமே காட்டுகிறது.

நல்ல சினிமாவை எடுப்பதில், வெற்றி படங்களில் நடிப்பதில், நஷ்டம் வராமல் தயாரிப்பாளர்களை காப்பதில் புதிய நிர்வாகம் கவனம் செலுத்தினால், விஷால் வெற்றி பெற்ற போது சொன்னது போல, பொற்காலமாக இருக்கும்.
அதை விடுத்து சினிமா வசனங்களை போல பஞ்ச் டயலாக் பேசினால் சாயம் வெளுத்து விடும்.

இதை ஆவேசம் காட்டும் ஞானவேல் ராஜா புரிந்து கொண்டால் சரி. ஏற்கனவே உங்கள் அத்துமீறிய பொது வெளி ஆபாசப் பேச்சுக்கே பெரும் சிக்கலை சந்தித்திருக்க வேண்டியவர் நீங்கள். அதைக் கண்டிக்கத் தவறியதால், தொடர்ந்து பொது வெளியில் மிரட்டல் பேச்சை வெளிப்படுத்துவது அழகல்ல. சினிமா துறை சார்ந்த நல்ல விஷயங்களை முன்னெடுக்க முயற்சி செய்யுங்கள். இது போன்ற உருட்டல் மிரட்டல் வசனங்களை சினிமாவில் கூட இப்போது ரசிகர்கள் ஏற்பதில்லை என்பதை பஞ்ச் டயலாக் படமெடுக்கும் ஞானவேல் ராஜாவுக்கு தெரியாமல் இருக்காது.

அதே போல... முதல் நாள் சந்திப்பிலேயே கேள்வி கேட்கும் செய்தியாளரை நடிகர் பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார்.

இந்த அணுகுமுறை ஆரோக்யமானதல்ல. இன்னும் நிர்வாக ரீதியாக நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தூரம் அதிகம்.

எல்லா நேரங்களிலும் குரல் உயர்த்தி பேசி ஜெயிக்க முடியாது என்பதை நடிகர் பிரகாஷ்ராஜ் புரிந்து கொண்டால் சரி.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

- கோடங்கி

English summary
In their first press meet, producers council new office bearers threatened the media with bad language.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil