ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட பிரகாஷ்ராஜ்!-வீடியோ

பெங்களூர் : கர்நாடக மாநிலம், மைசூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், விளக்கம் கேட்டு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவதூறு பேச்சு

அவதூறு பேச்சு

பிரகாஷ்ராஜ் ஆளும் பா.ஜ.க-வை அதிகமாக விமர்சித்து வருகிறர். இதனால், பா.ஜ.க-வினர் பிரகாஷ்ராஜ் மீது கோபத்தில் இருந்து வருகின்றனர். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹா 'பிரகாஷ்ராஜ் தன் மகன் இறந்த துக்கத்திலும் மனைவியை விட்டுவிட்டு டான்ஸ் ஆடுபவரோடு குடும்பம் நடத்தியவர்' என்று கூறியிருந்தார்.

பிரகாஷ்ராஜ் கோபம்

பிரகாஷ்ராஜ் கோபம்

பாஜக எம்.பி தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சித்தது பிரகாஷ்ராஜை கோபப்படுத்தியது. 'தர்க்க ரீதியாக எனக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்' என்றார். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார்.

பதில் இல்லை

பதில் இல்லை

ஆனால், பிரகாஷ்ராஜ் அனுப்பிய நோட்டீசுக்கு, பிரதாப் சிம்ஹா எந்தவித பதிலும் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா மீது மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு

அதில் தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா, உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். தவிர, தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X