»   »  ஜூனியர் என்டிஆர் விபத்துக்குள்ளான அதே இடத்தில்... விபத்தில் சிக்கிய நடிகை ப்ரணிதா!

ஜூனியர் என்டிஆர் விபத்துக்குள்ளான அதே இடத்தில்... விபத்தில் சிக்கிய நடிகை ப்ரணிதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சகுனி, மாஸ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ப்ரணிதா நேற்று காலை விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

Pranitha Wounded in Road Accident

தமிழில் சகுனி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ப்ரணிதா. இவர் நேற்று காலை காரில் தனது தாயாருடன் ஹைதராபாத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ப்ரணிதா வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு கீழிறங்கி பெரும் விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில் ப்ரணிதா மற்றும் அவருடன் உடன் வந்தவர்கள் பெரிய காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர்.

மேலும் இந்த விபத்தில் நடிகை ப்ரணிதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனைப் பார்த்த சிலர் ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

சிகிச்சைக்குப் பின்னர் வேறு ஒரு காரில் ப்ரணிதா ஹைதராபாத் சென்றார். இது குறித்து பிரணிதா "அந்த இடத்தில் ஆம்புலன்ஸை அழைத்தவர்களுக்கு நன்றி.

எல்லோருமே பாதுகாப்புடன் இருக்கிறோம். ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடந்த 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து விட்டு காரில் திரும்பியபோது, இதே இடத்தில்தான் விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.

சொல்லி வைத்தது போல அதே இடத்தில் தற்போது ப்ரணிதாவும் விபத்தில் சிக்கியிருப்பது டோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இச்சம்பவத்தை அறிந்த திரை நட்சத்திரங்கள் பலரும் ப்ரணிதாவைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

English summary
Actress Pranitha Wounded in Road Accident. She Wrote on Twitter "While on our way back from kammam. perfectly fine but unable to come out of the shock".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil