»   »  மாடல் கடத்தல் வழக்கில் பிரசாத் கைது

மாடல் கடத்தல் வழக்கில் பிரசாத் கைது

Subscribe to Oneindia Tamil

விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத், விளம்பர மாடல் நேகாவைக் கடத்திய வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுத்தியது, கொலை முயற்சி, தாக்குதல் உள்பட 18 வழக்குகள் மாமா பிரசாத் மீது தொடரப்பட்டுள்ளது. இதில் 5 வழக்குகளில் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி நேகாவைக் கடத்தியதாக புதிதாக ஒரு வழக்கில் பிரசாத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த நேகா(22) ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். பேஷன் ஷோக்களில் மாடல் அழகியாக வலம் வந்துள்ளார்.

ஒரு முறை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கன்னட பிரசாத்துடன் நேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பிரசாத் நேகாவை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளார். இதனால் அருவரும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து நேகாவை ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன் எனக் கூறி பெங்களூர் அழைத்து வந்து 3 படத்தில் குரூப் டான்ஸ்ராக நடிக்க வைத்துள்ளார் பிரசாத்.

மேலும் பட வாய்ப்பு பெற என்று கூறி படுக்கைக்கும் நேகாவை அனுப்பியுள்ளார் பிரசாத். பின்னர் நேகாவை சென்னை அழைத்து வந்து அண்ணாநகரில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து தனது ெசாந்த வீடு எனக் கூறி அங்கு நேகாவை தங்க வைத்தார்.

நேகாவின் பாதுகாப்புக்காக சீனு, உதயபாஸ்கர் என்ற 2 புரோக்கர்களை அங்கு வைத்தார். ஒரு நாள் இரவு கதை விவாதம் நடத்த வேண்டும், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்கு சிறப்பாக உல்லாசம் அனுப்பவிக்க வற்புறுத்தியுள்ளார்.

அப்போதுதான் பிரசாத்தின் சுயரூபம் நேகாவுக்கு தெரிய வந்துள்ளது. நடிகையாக்குவதாகக் கூறி அழைத்து வந்து தன்னை விபச்சாரியாக்கி விட்டது ெதரிய வந்து அதிர்ந்தார்.

மறுநாள் போலீஸார் நடத்திய சோதனையில் நேகா உள்பட 3 பெண்கள் மீட்கப்பட்டனர். சின்ன மாமாக்கள் சீனு உதயபாஸ்கர் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கன்னட பிரசாத்தும் கூட்டாளி ஜான்சனும் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேகாவை கடத்தி வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பிரசாத்தை கைது செய்துள்ளனர் போலீஸார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil