»   »  அனைத்து வசதிகள், கூடுதல் இருக்கைகளுடன் பிரசாத் லேப் தியேட்டர்!

அனைத்து வசதிகள், கூடுதல் இருக்கைகளுடன் பிரசாத் லேப் தியேட்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் இதயப் பகுதியான சாலிகிராமத்தில் இயங்கும் பிரசாத் நிறுவனத்துக்கும் தமிழ் சினிமாவுக்குமான பந்தம் நீண்ட பாரம்பர்யம் கொண்டது. தமிழ் சினிமாவின் ஆதார தூண்களில் ஒன்றாக இந்த நிறுவனம் திகழ்கிறது.

இந்த பெருமை மிக்க 'பிரசாத் லேப்' நிறுவனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது 'பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்'. இப்போது சகல வசதிகளுடனும் கூட ஒரே பிரிவியூ தியேட்டர் என்றால் அது பிரசாத்தான் எனும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Prasad Lab Theaters with more facilities

இதுகுறித்து இந்த தியேட்டரின் நிர்வாகியான கல்யாணம் கூறுகையில், "ஆரம்பத்தில் 128 இருக்கைகள் மட்டுமே இருந்த ப்ரிவியூ தியேட்டர், நிர்வாகியாக நான் பொறுப்பேற்ற பின் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு வணிக ரீதியாக நடத்தப்பட்டு வரும் தியேட்டர்களில் உள்ள நவீனமான 190 குஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டு முன்னை காட்டிலும் அதிகம் பேர் படம் பார்க்கும் வண்ணம் தியேட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இருக்கைகள் போடும் வசதியும் உள்ளது. கூடுதல் இருக்கைகளுடன் மொத்தம் 230 பேர் லேப் தியேட்டரில் அமர முடியும்.

Prasad Lab Theaters with more facilities

திரைப்படங்களை பளிச்சென்றும், துல்லியமாகவும் பார்வையாளர்கள் பார்த்து பரவச நிலை அடையும் வண்ணம் பழைய ஸ்க்ரீன் அகற்றப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புடைய சில்வர் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.

ஒலி ஒளி அமைப்பு துல்லியமாக இருக்கும் வகையில் 45 லட்ச ரூபாய் செலவில் 4 K தொழில் நுட்பம் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தப்பட்டுள்ள முதல் ப்ரிவியூ தியேட்டர் ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் மட்டுமே.

Prasad Lab Theaters with more facilities

அதுமட்டுமல்ல, கூடுதலாக பார்வையாளர்கள் வரும்பட்சத்தில், அருகிலேயே உள்ள 70 எம்எம் அரங்கிலும் அமர வைக்க தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் ஆசியாவிலேயே முதல் பெரிய 70 எம்எம் திரை கொண்ட நவீன அரங்காகும். இங்கு 80 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம்.

விஐபிகள் - செய்தியாளர்கள் சந்தித்துப் பேச நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய அறையும் லேப் தியேட்டரிலேயே உள்ளது. அருகில் உள்ள அழகிய புல்வெளியில் வீடியோ பைட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அரங்குகளில் கழிப்பறைகள் நவீனமயமாக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

250இருக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே ப்ரிவியூ தியேட்டர் சென்னையில் "ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் " மட்டுமே என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவரும் நன்கறிவார்கள். அதை மீண்டும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்," என்றார்.

English summary
Kalyanam, the Administrator of Prasad Lab Theaters said that the movie hall has been renovated with new amenities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil