»   »  பார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா

பார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனைவரையும் இம்பிரஸ் செய்த பிரசன்னா- வீடியோ

சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு வந்த பிரசன்னா அனைவரையும் இம்பிரஸ் செய்துவிட்டார்.

ஆர்யாவுக்கு பெண் தேட நடக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு காதல் திருமணம் செய்த சினேகா, பிரசன்னா தம்பதி வந்திருந்தார்கள். தானும், பிரசன்னாவும் சந்தித்து நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார் சினேகா.

அகாதா, சூசனா, சீதாலட்சுமி ஆகியோரில் ஆர்யா யாரை திருமணம் செய்தாலும் சந்தோஷம் என்றார்கள்.

பிரசன்னா

பிரசன்னா

சினேகா வீட்டில் அதிகம் விட்டுக் கொடுப்பது கணவர் பிரசன்னா தானாம். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். மகன் வந்த பிறகு காதல் மெச்சூராகியுள்ளதாக சினேகா தெரிவித்துள்ளார்.

பெற்றோர்

பெற்றோர்

தங்கள் இருவரையும் சேர்ந்து அமரவிடாமல் விஹான் எப்பொழுதுமே நடுவில் வந்து அமர்ந்துவிடுவான். சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அனைத்து பெண்கள் மீதான மரியாதை அதிகரித்ததாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.

ஊசி

ஊசி

பிரசவ வலியை பார்த்ததற்கே எனக்கு பயமாக இருந்தது. சினேகாவுக்கு இயற்கையாக டெலிவரி ஆகவில்லை. அதனால் வலியை அதிகரிக்க ஊசி போட்டார்கள். அதுவரை சினேகாவை பிடித்து ஆறுதல் கூறிய நான் டாக்டர் பெரிய ஊசியை எடுத்ததை பார்த்து எனக்கு தலைசுற்றிவிட்டது.

அம்மா

அம்மா

டாக்டர் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டேன். தலைவலி வரும்போது எல்லாம் இதை தான் நினைப்பேன். தலைவலியையே தாங்க முடியவில்லை என்றால் அந்த வலி எப்படி இருக்கும். ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை என்று பிரசன்னா கூறியதை கேட்டு அனைவரும் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.

English summary
Cute couple Prasanna, Sneha came to Enga Veetu Mapillai show on april 16th. Prasanna has impressed everyone by talking about Sneha's delivery and mothers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X