»   »  ”காலக்கூத்து”... ஷாமின் இடத்தில் இப்போது பிரசன்னா?

”காலக்கூத்து”... ஷாமின் இடத்தில் இப்போது பிரசன்னா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் நடிகர் ஷாமின் இடத்தினை பிடித்துள்ளாராம் பிரசன்னா. அதாவது, காலக்கூத்து என்ற படத்தில் ஷாமிற்கு பதிலாக பிரசன்னா கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12பி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷாம். இப்படத்தை தொடர்ந்து லேசா லேசா, இயற்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான "புறம்போக்கு" திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நட்சத்திரப் பட்டாளம்:

நட்சத்திரப் பட்டாளம்:

இப்படத்தில் ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவருடன் ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்திருந்தனர்.

காலக் கூத்து திரைப்படம்:

காலக் கூத்து திரைப்படம்:

ஷாம் தற்போது "ஒரு மெல்லிய கோடு" படத்தில் அர்ஜூனுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், "மெட்ராஸ்" படத்தில் நடித்த கலையரசனுடன் இணைந்து "கால கூத்து" என்னும் படத்திலும் நடித்து வந்தார்.

விலகிவிட்டாரா ஷாம்?:

விலகிவிட்டாரா ஷாம்?:

ஆனால், இப்படத்தில் இருந்து ஷாம் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிளவு ஏற்படுத்திய கருத்து வேறுபாடு:

பிளவு ஏற்படுத்திய கருத்து வேறுபாடு:

"கால கூத்து" படத்தை இயக்கி வரும் நாகராஜனுக்கும், ஷாமுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷாம் இப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.

இரட்டை குதிரை சவாரி:

இரட்டை குதிரை சவாரி:

தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் பிரசன்னாவை நடிக்க வைக்கவுள்ளனர். நட்பை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே மற்றும் தன்ஷிகா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.

English summary
We had earlier reported how actor Shaam decided to opt out of Kaala Koothu as he had some misunderstanding with the director. Now, the team has brought in actor Prasanna in place of Shaam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil