ஊசியை பார்த்து பயந்த சினேகா…. பிரசன்னா பகிர்ந்த காமெடி வீடியோ!

சென்னை : தமிழ் சினிமாவில் சில ஜோடிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். அப்படி இருக்கும் ஜோடிகளின் வரிசையில் சினேகா மற்றும் பிரசன்னாவும் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் டோசை செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி போடும் போது சினேகா செய்த அட்டகாசத்தை காமெடி வீடியோவாக பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

மகன் மற்றும் மகள்

மகன் மற்றும் மகள்

முதலில் நடிகர்களாக அறிமுகமாகி பின் காதலர்களாக மாறினர். கடந்த 2012ம் ஆண்டு புன்னகை அரசியை திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

துப்பறிவாளன் 2

துப்பறிவாளன் 2

சினேகா கடைசியாக பட்டாசு திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அதேபோல பிரசன்னா கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஃபியா சேப்டர் 1 படத்தில் நடித்தார். அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார்.

முதல் டோஸ்

முதல் டோஸ்

சினேகா மற்றும் பிரசன்னா நட்சத்திர தம்பதிகளான இவர்கள் ஜூலை 18ந் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோசை தனியார் மருத்துவமனையில் போட்டுக் கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் லைக்குகளை பெற்றது.

சினேகா அட்டகாசம்

இந்நிலையில், தடுப்பூசி போடும் போது சினேகா செய்த அட்டகாசத்தை காமெடி வீடியோவாக பிரசன்னா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சினேகா ஊசியைப்பார்த்து பயப்படுவதும், மருத்துவர் சிரிஞ்சை தன் அருகில் கொண்டு வரும் போதெல்லாம் சினேகா நகர்ந்து செல்வதையும் காணமுடிந்தது. இதுல ஹைட்லைட்டே என்னவென்றால் 84 நாட்களுக்குப் பிறகு சீசன் 2 உறுதி என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார் பிரசன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X