»   »  பிரஷாந்த்துக்கு எப்போ கல்யாணம்?

பிரஷாந்த்துக்கு எப்போ கல்யாணம்?

Subscribe to Oneindia Tamil

ஷாக் படம் வெளியான பிறகு பிரஷாந்த்துக்கு கல்யாணம் செய்யப் போவதாக அவரது தந்தை தியாகராஜன்கூறியுள்ளார்.

நடிகர் பிரஷாந்த் தனது 30-வது பிறந்த நாளை நேற்று எளிமையாகக் கொண்டாடினார். தந்தை தியாகராஜன்தயாரித்து வரும் ஷாக் பட படப்பிடிப்பின்போது கேக் வெட்டிய பிரஷாந்த்துக்கு நடிகைகள் சுகாசினி, மீனாஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அப்போது பிரஷாந்த்துக்கு எப்போ கல்யாணம் செய்து வைக்கும் ஐடியா என்று தியாகராஜனிடம் கேட்டபோது,ஷாக் வெளியாகட்டும். அதன் பிறகு கெட்டி மேளம்தான் என்றார் அப்பாவின் பொறுப்புடன்.

பொண்ணு பார்த்தாச்சா என்ற அடுத்த கேள்விக்கு, பொண்ணுக்கா பஞ்சம், நாளைக்கேக் கூட பார்த்துக்கலாம்.ஆனால் இதுவரை பெண் முடிவாகவில்லை என்றார் தியாகு.

பிரஷாந்த்திடம் பொண்ணு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டபோது, அப்பாவையும், அம்மாவையும் நன்குகவனித்துக் கொள்ளும், குடும்பத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய பெண்ணாக இருக்க வேண்டும்.

எனதுபெற்றோரை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் சிரிப்புடன்.

எல்லா நடிகர்களிடம் வழக்கமாக கேட்கப்படும் அரசியலில் குதிப்பீர்களா என்ற கேள்வியை பிரஷாந்த்திடம்போட்டபோது, நடிப்பதுதான் எனக்கு முக்கியம். நடிப்புதான் இப்போதைய எனது கவனம். எந்தக் கட்சிக்கு எனதுஆதரவு என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது.

நாட்டின் வளர்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்ளும்கட்சியை ஆதரிப்பேன் என்றார். அட!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil