»   »  பிரஷாந்த் நடிப்பில் நான்கு மொழிகளில் தயாராகும் 'இருபத்தியாறு 26'!

பிரஷாந்த் நடிப்பில் நான்கு மொழிகளில் தயாராகும் 'இருபத்தியாறு 26'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வசூல் சாதனை புரிந்த ஸ்பெஷல் 26 படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ரீமேக் செய்கிறார் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.

இந்த நான்கு மொழிகளிலும் நாயகனாக நடிக்கிறார் பிரஷாந்த்.

Prashant's 'Irupathiyaaru 26' in four languages

பிரஷாந்த் - அறிமுக நாயகி ஆஸ்திரேலிய அழகி அமண்டா நடிக்கும் சாஹசம் விரைவில் வெளிவரவுள்ளது. ஆடல், பாடல், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகியுள்ள சாஹசம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து பிரஷாந்த் நடிக்கும் படம் இருபத்தியாறு 26. ஹிந்தியில் அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரி குவித்த படம் 'Special 26'. இந்த படத்தின் நான்கு மொழி (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) ரீமேக் உரிமையை நடிகரும், இயக்குனரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்த படத்திற்கு தமிழிலும் 'இருபத்தியாறு 26' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Prashant's 'Irupathiyaaru 26' in four languages

பிரஷாந்துடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமைய்யா, அபி சரவணன், ரோபோ சங்கர், ஜெய் ஆனந்த், பெசண்ட் நகர் ரவி, தேவதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள்.

முன்னணி கதாநாயகி ஒருவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் கௌரவ வேடத்தில் தேவயானி மற்றும் சிம்ரன் நடிக்க உள்ளார்கள். மாறுபட்ட கதையம்சம் கொண்ட இருபத்தியாறு தமிழுக்கு வித்தியாசமான படமாக இருக்கும்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் இருபத்தியாறு படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்.

Prashant's 'Irupathiyaaru 26' in four languages

இசை - அனிருத், எடிட்டிங் - டான் மேக்ஸ்.

படத்தில் ஒரு பாடலுக்கு பிரஷாந்துடன் இணைந்து நடனமாடவுள்ளார் இந்தியில் பிரபல கதாநாயகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

திரைக்கதை, வசனம் எழுதி மிகுந்த பொருட்செலவில் பிரஷாந்தின் இருபத்தியாறு படத்தை தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Prashant and Thiagarajan are remaking hindi hit Special 26 in 4 South Indian Languages.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil