»   »  பிரஷாந்த் வழக்கு - நவ. 6க்கு ஒத்திவைப்பு

பிரஷாந்த் வழக்கு - நவ. 6க்கு ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil


தனக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நடிகர் பிரஷாந்த் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Click here for more images

தனது மனைவி கிரகலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரஷாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, கிரகலட்சுமிக்கும், வேணு பிரசாத் நாராயணன் என்பவருக்கும் கல்யாணம் நடந்ததாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார் பிரஷாந்த்.

இதையடுத்து தனக்கும், கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி இன்னொரு மனுவை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி தேவதாஸ் முன்பு நடந்தது. அப்போது பிரஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார். கிரகலட்சுமியும் ஆஜரானார்.

அப்போது கிரகலட்சுமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எனக்கும், வேணு பிரசாத்துக்கும் இடையே கல்யாணம் நடக்கவில்லை. எனக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக வேணு பிரசாத்தும், பிரஷாந்த்தும் பொய்யான புகாரைக் கூறியுள்ளனர். எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதற்குப் பிரஷாந்த் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ், விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read more about: grahalaxmi prashanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil