Don't Miss!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பிக் பாஸ் அசீமுக்கு ஆதரவளித்த பிரசாந்த் ரங்கசாமி.. காசு வாங்கிட்டீங்களா என கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: சினிமா விமர்சனம் மற்றும் ப்ரமோஷன் செய்து வந்த பிரசாந்த் ரங்கசாமி திடீரென பிக் பாஸ் போட்டியாளர் அசீமுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு வரும் நிலையில், காசு வாங்கிட்டீங்களா அசீம் இப்படி பிஆர் வேலையை பார்க்குறீங்களே என ஜோ மைக்கேல் உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அசீமுக்கு ஆதரவாக ட்வீட் போட்டா திட்டுவாங்கன்னா அசீம் நல்லவர் தான் என்றும் விக்ரம் நல்லவன்னா அசீம் மகாத்மா என்றும் பிரசாந்த் ரங்கசாமி தொடர்ந்து பதில் அளித்து ட்விட்டரில் வாக்குவாதம் நடத்தி வருகிறார்.
அசீம் தான் டைட்டில் வின் பண்ணப் போகிறார் என பிரசாந்த் சொல்லி வரும் நிலையில், #AbuserAzeem ஹாஷ்டேக்கை பிக் பாஸ் ரசிகர்கள் காலை முதலே டிரெண்ட் செய்து வருகின்றனர்.
லாஸ்லியாவை
முந்திய
பிக்
பாஸ்
பிரபலம்..
தளபதி
67
படத்தில்
நடிக்க
போகும்
அந்த
அதிர்ஷ்டசாலி
யாரு?

பிஆர் ரெடி பண்ணிக்கோங்க
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக போக வேண்டும் என்றால் ஸ்ட்ராங்கான பிஆர் டீம் ரெடி பண்ணிக்கோங்க, அரசியல்வாதிகள் சிலர் உங்களுக்கு ஆதரவளித்தால் போதும் டைட்டில் உங்களுக்குத்தான். மக்களின் கருத்துக்கள் எல்லாம் இனிமேல் தேவையில்லை என்கிற விதத்தில் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே படு கேவலமாக மாறி விட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பிஆர் பற்றிய பேச்சுக்கள்
24 மணி நேரமும் ஷோ ஓடிக் கொண்டிருப்பதால் போட்டியாளர்கள் பிஆர் குறித்த வெளிப்படையான பேச்சுக்களை பேசும் போது அதிகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் குழுவினர் அதையெல்லாம் கட் செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். மணிகண்டன், ராம், அசீம், விக்ரமன் என பலருக்கும் வெளியே பிஆர் டீம் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அரசியல் செல்வாக்கு
இதில், இறுதிப்போட்டியாளர்களாக மாறி உள்ள அசீம் மற்றும் விக்ரமனுக்கு ஸ்ட்ராங்கான அரசியல் செல்வாக்கு இருப்பது கண்கூடாக தெரிகிறது. விக்ரமனுக்கு திருமாவளவன் உள்ளிட்டோரே சப்போர்ட் செய்து வரும் நிலையில், அசீமுக்கு யூடியூப் விமர்சகர் மற்றும் நடிகரான இட்டிஸ் பிரசாந்த் எனப்படும் பிரசாந்த் ரங்கசாமி திடீரென ஆதரவளித்து இருப்பது அனைவரையும அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விக்ரமனுக்கு எதிராக
அசீமுக்கு ஆதரவாக பிரசாந்த் ரங்கசாமி பேச ஆரம்பித்துள்ள நிலையில் அவர் விக்ரமனுக்கு எதிராக செயல்படுகிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அறம் வெல்லும் என விக்ரமன் கோல புகைப்படங்களை பதிவிட்ட நிலையில், சரியா வெல்லட்டும்.. அதுக்கு எதுக்கு என் மூஞ்சியை வரைஞ்சி வச்சிருக்கீங்க என கலாய்த்துள்ளார்.

விக்ரமன் வின் பண்ணுனா
அசீன் வின் பண்ணினா சொசைட்டி பேட் ஆகிடுமா.. அப்போ விக்ரமன் வின் பண்ணினா தமிழ்நாடு ஸ்விட்சர்லாந்தா ஆகிடுமா.. இல்லை கேட்குறேன் என தொடர்ந்து அசீமுக்கு ஆதரவாக ஏகப்பட்ட ட்வீட்களை போட்டும் அதை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தும் வருகிறார் பிரசாந்த் ரங்கசாமி.

காசு வாங்கிட்டீங்களா
சினிமா படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை சொல்ல யூடியூப் விமர்சகர்கள் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. புதிய படங்களை ப்ரமோட் செய்ய பல டிராக்கர்களும் போராடி வருவதையும் சினிமாவில் அவர்களுக்கு கிரெடிட்ஸ் கொடுப்பதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அசீமுக்கு ஆதரவளித்து பிரச்சாரம் பண்ண காசு வாங்கிட்டீங்களா பிரசாந்த் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.