»   »  கல்யாணம் செல்லாது- அறிவிக்கக் கோரி பிரஷாந்த் மனு

கல்யாணம் செல்லாது- அறிவிக்கக் கோரி பிரஷாந்த் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை:

எனக்கும், கிரகலட்சுமிக்கும் நடைபெற்ற திருமணம் சட்டபடி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் பிரசாந்திற்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ல் திருமணம் முறைப்படி நடைபெற்றது. பின்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற கிரகலட்சுமி மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மேலும் கணவர் பிரசாந்த் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் திடீரென வேணுபிரசாத் என்பவர், நான் கிரகலட்சுமியை முதல் திருமணம் செய்தவர் என்று அதற்கான ஆதாரங்களை போலீஸாரிடம் காட்டி புகார் அளித்தார். அதில் அவர் 13.11.1998-ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், 13.12.1998-ல் முறைப்படி திருமணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த பிரசாந்த், தனக்கும் கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றும், தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று தன்னுடைய வக்கீல் ஆனந்தன் மூலம் குடும்ப நல நீதி மன்றத்தில் இன்று புதியதாக தாக்கல் செய்த மனுவில் நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Read more about: chennai grahalaxmi prasanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil