»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல கதை கிடைத்தால், தந்தையுடன் சேர்ந்து நடிப்பேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் பேசியபோது தெரிவித்ததாவது:

சினிமாவில் நடிப்பது எளிதான காரியம் அல்ல. சொல்லப் போனால் எனது குடும்பத்தில் எனது தந்தை (தியாகராஜன்) நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவரால் தொடர்ந்து நடிக்க இயலவில்லை. நான் நடிக்க வந்த பிறகு, அவர் சினிமாவை விட்டு விலகி விட்டார். ஆனால் நல்ல கதை கிடைத்தால்இருவரும் இணைந்து நடிப்போம். அதற்கான கதையைத் தேடிக் கொண்டுள்ளோம்.

கூட்டுக்குடும்பம்:

விஜய்காந்த் நடிகர் சங்கத் தலைவரான பிறகு சினிமாத் துறையில் உள்ள அனைவரும் ஒரு கூட்டுக் குடும்பமாக மாறி விட்டோம். இது ஒரு பெரியதொழிற்சாலையைப் போன்றது. பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.

சம்பள குறைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன். டி.வி ஆதிக்கத்தால்,சினிமாவிற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இன்றும் நல்ல படங்கள் நூறு நாட்கள் ஓடுகின்றன.

தற்போது நான் பிரியாத வரம் வேண்டும்., ஸ்டார்., சாக்லெட்., விரும்புகிறேன், ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். விரும்புகிறேன் படத்தில் தீயணைப்புவீரனாக நடிக்கிறேன். இதில் தீயணைப்பு வீரர்களின் கஷ்டங்களை உணர்த்தியுள்ளேன். இப்படம் எனக்கு நல்ல பெயரை ஈட்டித் தரும் என நம்புகிறேன்.

வெளிநாடுகளில் உள்ள டாக்டர்கள், இன்ஜினியர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த அழைக்கின்றனர். அவர்களின் அழைப்பை ஏற்று நான் அங்கு சென்றுநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.

காதல் திருமணமா? நோ சான்ஸ்:

நான் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொள்ளும் முன்பு சினிமாவில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இவ்வாறு நடிகர் பிரசாந்த் தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil