»   »  திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் ‘சாஹசம்’ செய்யப் போகும் பிரசாந்த்!

திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் ‘சாஹசம்’ செய்யப் போகும் பிரசாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் ஹிட்டடித்த ஜூலாயியின் தமிழ் ரீமேக் தான் சாஹசம். இப்படத்தில் நாயகனாக பிரசாந்த் நடிக்க, நாயகியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமண்டா நடித்துள்ளார். அருண்ராஜ் வர்மா இயக்குகிறார்.

மலையூர் மம்பட்டியான், பொன்னர் சங்கர் என ஏற்றி வைத்திருந்த உடலைக் குறைத்து மீண்டும் ஜீன்ஸ் பட உடலை இப்படத்தில் கொண்டு வந்திருக்கிறார் பிரசாந்த்.

இப்படத்தின் நாயகி அமண்டா பாலே நடனத்தில் கை தேர்ந்தவர். நடிப்புப் பயிற்சியும் பெற்றிருப்பதால் தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

சென்னை இளைஞர்...

சென்னை இளைஞர்...

இப்படத்தில் ரவி என்ற கதாபாத்திரத்தில் சென்னை இளைஞனாக நடிக்கிறாராம் பிரசாந்த். ஒரு இளைஞன் தனது வாழ்நாளில் எவ்வளவு சாகஸங்களைச் செய்கிறான் என்பதுதான் படத்தின் கதைக்கரு. வில்லனும் ஹீரோவும் கடைசி ரீலில் கூடச் சந்தித்துக்கொள்ளமாட்டார்கள் என்பது படத்தின் சிறப்பாம்.

திரும்பத் திரும்ப பார்ப்பீங்க...

திரும்பத் திரும்ப பார்ப்பீங்க...

வில்லன் இதை உன்னால் செய்ய முடியாது என்று சவால் விடும் விசயங்களை, நேர்மையான வழியில் புத்திசாலித்தனமாகச் செய்து முடிக்கும் நாயகன் கதாபாத்திரம். இந்தப் படத்தில் நாயகன் செய்யும் சாகஸங்களுக்காகவே ரசிகர்கள் திரும்பத் திரும்ப இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்கிறது படக்குழு.

ஒரு பாடல்...

ஒரு பாடல்...

இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட உள்ளார் இந்தி நடிகை நர்கீஸ். இதற்காக இரண்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்த நர்கீஸுக்கு சம்பளம் ரூ. 25 லட்சமாம். இப்படத்திற்கென பிரத்யேகமாக கத்ரீனா கைப்பின் மேக்கப் மேனை அழைத்து நர்கீஸுக்கு மேக்கப் போடப்பட்டுள்ளதாம்.

இளமை... இதோ... இதோ....

இளமை... இதோ... இதோ....

மீண்டும் இளமையான தோற்றத்துடன் இப்படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். படத்தின் ஸ்டில்களிலேயே பிரசாந்த்தின் முகப் பளப்பளப்பு கூடியிருப்பது தெரிகிறது. இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் பிரசாந்த்.

விரைவில் இசை வெளியீடு...

விரைவில் இசை வெளியீடு...

சாஹசம் படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில் படத்தை திரைக்கு கொண்டு வந்துவிடுவோம் என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

English summary
Saahasam is a upcoming Tamil movie directed by Arun Raj Varma. Prashanth, Amanda, Nargis Fakhri, Thambi Ramaiah and Tulasi are in lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil