»   »  ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலருக்கு திடீர் நிச்சயதார்த்தம்

ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலருக்கு திடீர் நிச்சயதார்த்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாலிவுட் நடிகர் பிரதீக் பாபருக்கும் அவரது காதலி சான்யா சாகருக்கும் நிச்சயதார்த்தம்

மும்பை: பாலிவுட் நடிகர் பிரதீக் பாபருக்கும் அவரது காதலி சான்யா சாகருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் பாபர், மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டிலின் மகன் நடிகர் பிரதீக் பாபர். கவுதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கான ஏக் தீவானா தாவில் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்தார் பிரதீக்.

த்ரிஷா கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடித்திருந்தார்.

ஏமி

ஏமி

ஏக் தீவானா தா படத்தில் நடித்தபோது ஏமி ஜாக்சனுக்கும், பிரதீக் பாபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றியது பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும்.

பிரிவு

பிரிவு

பிரதீக் மீது கொண்ட காதலால் மேரா பியார், மேரா பிரதீக் என்று தனது வலது கையில் பச்சை குத்திக் கொண்டார் ஏமி. அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

பிரதீக் பாபருக்கு சான்யா சாகரை 8 ஆண்டுகளாக தெரியும். கடந்த ஓராண்டு காலமாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார் பிரதீக். லக்னோவில் உள்ள சான்யாவின் பண்ணை வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.

English summary
Bollywood actor Prateik Babbar has bid adieu to singlehood by getting engaged to his long-time girlfriend Sanya Sagar. Prateik and Sanya have not finalised their wedding date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil