»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

பிரபல நடிகை பிரதியுக்ஷா, காதல் தோல்வி காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்துகொண்டார்.

பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரதியுக்ஷா. இவர் தமிழில் தவசி, மனுநீதி,சூப்பர் குடும்பம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடித்தாலும் இவரது சொந்த ஊர் ஹைதராபாத். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இது தவிரதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் நடிகையாவதற்கு முன்பிருந்தே சித்தார்த்த ரெட்டி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால்இவர்களது காதல் இருவரது குடும்பத்திற்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாகவே இருந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் ரெட்டியின்குடும்பத்தில் இவர்களது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் இவர்கள் மனம் நொந்த நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் எங்கள் வீட்டில் கண்டிப்பாக நம்காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்துநேற்று மதியம் இருவரும் காரில் ஹைதராபாத் நகரை சுற்றி வந்துள்ளனர்.

பின்னர் ஓரிடத்தில் காரை நிறுத்தி, ஏற்கனவே வாங்கி வந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். இதில்பிரதியுக்ஷா உடனடியாக மயங்கினார். இதையடுத்து ரெட்டி காரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்று தானும், பிரதியுக்ஷாவும் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

உடனே அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோதே பிரதியுக்ஷா இறந்துவிட்டார்.அவரது காதலனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடிகை பிரதியுக்ஷாவின் உடலில் சில காயங்கள்காணப்பட்டன.

அதனால் அவரது மரணம் தற்கொலை தானா? அல்லது கொலை செய்தார்களா என்று ஹைதராபாத் போலீசார்விசாரித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil