»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

பிரபல நடிகை பிரதியுக்ஷா உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா என்று அறிய 2வதுமுறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரதியுக்ஷா. இவர் பல ஆண்டுகளாகசித்தார்த்த ரெட்டி என்பவரை காதலித்து வந்தார்.

ஆனால் அவருடைய காதலரின் வீட்டில் எதிர்க்கவே ஞாயிற்றுக்கிழமை பிரதியுக்ஷாவும், அவரது காதலர்சித்தார்த்த ரெட்டியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து காரில் இருந்த படியே ஏற்கனவே வாங்கி வந்ததூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் விஷமருந்தியது தெரியவந்துள்ளது.

அவரது உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் உடலில் பல காயங்கள் இருந்தன.

எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்று போலீசார் சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்துபிரதியுக்ஷாவின் உடல் 2வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது காதலர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டார்.திங்கள்கிழமை அவரது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

ஆனால் அவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டுள்ளார். அவர் பேசத் தொடங்கியதும்பிரதியுக்ஷாவின் சாவின் மர்மம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil