»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை பிரதியுஷாவின் மர்மச் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரிக்கவுள்ளது.

அவர் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது காதலர்சித்தார்த் ரெட்டியில் குடும்பத்தினரே இந்தக் கொலைக் கும்பலை அனுப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.மகனின் காதல் பிடிக்காமல் அவர்கள் இதைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கற்பழித்துவிட்டு அவருக்கு விஷம் கொடுத்து இந்தக் கும்பல் கொன்றதாகத் தெரிகிறது. இச் சம்பவம் குறித்துத்தெரிந்தவுடன் ரெட்டியும் விஷம் குடித்துள்ளார். பின்னர் பிரதியுஷாவையும் தூக்கிக் கொண்டு மருத்துவனைக்குச்சென்றுள்ளார்.

ஆனால், பிரதியுஷா சிகிச்சைக்கு முன்பே இறந்துவிட்டார். ரெட்டி இன்னும் ஐ.சி.யு. வார்டில் உள்ளார்.

இந் நிலையில் பிரதியுஷாவின் உடலை பிரதேப் பரிசோதனை செய்த டாக்டர் முனுசாமி அவர் 3 பேரால்கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மார்பகத்தில் கடிபட்ட காயங்கள் இருந்ததாகவும், அவரது காலில் உறைந்தவிந்து இருந்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால், இதை மறுத்த போலீஸ் மீண்டும் இன்னொரு டாக்டரை வைத்து பிரேதப பரிசோதனை செய்தது.பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக இந்த டாக்டரின் அறிக்கை கூறியது.

இதையடுத்து பிரதியுஷாவின் கொலையை மறைக்க மாநில அரசே முயல்வதாக ஆந்திராவில் கொந்தளிப்புகிளம்பியது. பல முன்னணி நடிகர்களும் முதல்வரை சந்தித்து புகார் கூறினர்.

முதலில் உடல் பரிசோதனை செய்த டாக்டருக்கு ஒரு அமைச்சரே மிரட்டல் விடுத்தார். இந்த கொலை மறைப்புமுயற்சிகளால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பெயர் நாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மர்மச் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை அரசு நிச்சயம் தண்டிக்கும் என்று கூறிய நாயுடு இதை அரசியல்விவகாராமாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதியுஷா இந்த அன்று அவர் அணிந்திருந்த ஆடைகளை போலீசார் எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ரெட்டிகுடும்பத்தின் சாதி, பண, அரசியல் பலமே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. இதையும் சி.பி.ஐ. விசாரிக்கும்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil