»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பிரதியுஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக போலீசார் மற்றும் டாக்டர்கள்மீது அவருடைய தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை பிரதியுஷாவின் கொலையை மறைக்க ஆந்திர போலீஸ் பல தகிடுதித்தங்களை செய்து வருவதாகத்தெரிகிறது. முதலில் தற்கொலை என்று போலீசார் கூறினர். பிறகு தற்கொலை அல்ல கொலை என்று டாக்டர்கள்கூறினர். இதையடுத்து பிரேதப் பரிசோதனை. அதில் கொலை என்று தெரியவர, மீண்டும் பிரேதப் பரிசோதனைஅதில் தற்கொலை என்று மாறியது.

பிரதியுஷாவின் காதலரான சித்தார்த்தரெட்டியின் தந்தை ஆந்திராவில் பெரிய தொழிலதிபர். அவருடைய குடும்பம்இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான் போலீசார் கொலையை, தற்கொலை என்று மறைக்கப்பார்க்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பிரதியுஷாவின் தாயார் சரோஜினிதேவி நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதியுஷாவும், சித்தார்த்த ரெட்டியும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதலுக்கு சித்தார்த்த ரெட்டியின் தந்தைகடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எங்களுக்கும் மிரட்டல் வந்தது.

அவரது தூண்டுதலின் பேரில் தான் என் மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பிரதியுஷா மருத்துவமனையில்இருந்த போது அவளை பார்க்க என்னை ஏன் அனுமதிக்கவில்லை? ஆனால் ரெட்டியை பார்க்க அவருடையதந்தையை மட்டும் அனுமதித்தது ஏன்?

பிரதியுஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அவர் அணிந்திருந்த ஆடைகளைதடயவியல் துறைக்கு மருத்துவனை நிர்வாகம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் ஏன் அனுப்பவில்லை?

என் மகள் கற்பழித்து, கொலை செய்யப்பட்டதற்கான தடயம் அவரது ஆடையில் இருந்தது. ஆடையைஅனுப்பினால் எங்கே எல்லா விஷயமும் தெரிந்து விடுமோ என்று தான் மருத்துவமனை நிர்வாகம் ஆடையைஅனுப்பவில்லை.

ரெட்டியின் குடும்பத்தினர் தான் சதி செய்து என் மகளை கொன்று விட்டதோடு, உண்மையை மறைக்கபார்க்கிறார்கள். நான் விட மாட்டேன், கடைசி வரை போராடுவேன் என்றார் சரோஜினிதேவி.

பிரதியுஷாவை சித்தார்த்ரெட்டியின் வீட்டினரே ஆட்களை விட்டு கற்பழித்து விஷம் குடிக்கச் செய்ததாகவும் இதுதெரியவந்த ரெட்டியும் விஷம் குடித்தாகவும் பின்னர் இருவரும் சேர்ந்தே மருத்துவமனைக்கு வந்ததாகவும்லேட்டஸ்ட் ஹைதராபாத் தகவல் கூறுகிறது.

அவரது ஆடையில் விந்து உறைந்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த ஆடைகளை பாரன்சிக் லேபுக்குமருத்துவமனை அனுப்பவில்லை.

சித்தார்த்ரெட்டியின் பண பலமும், ஜாதி பலமும் இதனால் கிடைத்த அரசியல் பலமும் போலீசின் கைகலைக் கட்டிப்போட்டுவிட்டதாகத் தெரிகிறது. சக நடிகையின் மரணத்தில் பெரும் ரகசியம் நிலவி வரும் நிலையில் நம் ஊர் சூப்பர்டூப்பர் ஸ்டார்கள் இது குறித்து இதுவரை ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil